‘நடுக்கடலில் திடீரென ரிப்பேர்’.. மூழ்கிய படகின் உச்சியில் 2 நாட்களாக நின்ற நபர்.. மீனை சாப்பிட்டு உயிர் பிழைத்த ‘திக்திக்’ நிமிடங்கள்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

படகு உடைந்து நடுக்கடலில் தத்தளித்த நபர் 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

‘நடுக்கடலில் திடீரென ரிப்பேர்’.. மூழ்கிய படகின் உச்சியில் 2 நாட்களாக நின்ற நபர்.. மீனை சாப்பிட்டு உயிர் பிழைத்த ‘திக்திக்’ நிமிடங்கள்..!

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் ஸ்டூவர்ட் (62). இவர் ஃபுளோரிடாவின் போர்ட் கனவரல் பகுதியில் உள்ள துறைமுகத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை (27.11.2020) மாலை தனது படகில் அட்லாண்டிக் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார். இவர் வழக்கமாக இரவு நேரங்களில் கடலில் தங்குவது இல்லை. ஆனால் கடலுக்கு சென்ற ஸ்டூவட் இரவு நீண்ட நேரமாகியும் கரைக்கு திரும்பவில்லை.

Missing man found clinging to capsized boat after two days at sea

இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்டூவர்ட்டின் உறவினர்கள் அடுத்த நாள் காலை இதுகுறித்து கடலோர காவல்படையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாயமான ஸ்டூவர்டை தேடும் பணியில் ஃபுளோரிடா மாகாண கடலோர காவல்படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் ஸ்டூவார்ட் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

Missing man found clinging to capsized boat after two days at sea

இந்நிலையில் மாயமாகி கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு பின்னர் நவம்பர் 29 காலை 11 மணியளவில் கடற்கரையில் இருந்து 86 மைல் தொலைவில் ஸ்டூவர்ட் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஸ்டூவர்ட்டின் படகு நவம்பர் 27-ம் தேதி நள்ளிரவில் நடுக்கடலில் நின்றுகொண்டிருந்தபோது திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடல் நீர் படகிற்குள் நுழைய ஆரம்பித்ததால் படகு கடலுக்குள் மூழ்கத்தொடங்கியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்டூவர்ட் படகின் மேற்பரப்புக்கு சென்று இரவு முழுவதும் விழித்தே இருந்துள்ளார்.

Missing man found clinging to capsized boat after two days at sea

அடுத்த நாள் அப்பகுதியில் யாரவது மீன்பிடிக்க வருவார்களா? என உதவியை எதிர்பார்த்து ஸ்டூவர்ட் காத்திருந்தார். ஆனால் அன்று முழுவதும் அப்பகுதிக்கு யாரும் வரவில்லை. மீன் உள்ளிட்ட சில கடல்வாழ் உயிரினங்களை சாப்பிட்டு அன்று உயிர் பிழைத்துள்ளார். அதற்கு அடுத்த நாள் காலை ஸ்டூவர்டின் படகு கிட்டத்தட்ட முழுமையாக மூழ்கிவிடும் நிலைக்கு சென்றுள்ளது.

Missing man found clinging to capsized boat after two days at sea

அப்போது அதிர்ஷ்டவசமாக அப்பகுதி வழியாக சென்றுகொண்டிருந்த ஒரு படகை கண்ட ஸ்டூவர்ட், தனது சட்டையை கழற்றி சைகை காட்டியுள்ளார். இதை கவனித்த அந்த படகில் இருந்தவர்கள் உடனே ஸ்டூவர்டை மீட்டுள்ளனர். கடலில் தனியாக தத்தளித்த ஸ்டூவர்ட் கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்