9 வருடங்களுக்கு முன் மாயமான விமானம்.. குடும்பத்தினர் வச்ச புதிய கோரிக்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்9 வருடங்களுக்கு முன்னர் காணாமல்போன மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க முயற்சி எடுக்கும்படி அந்த விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
மலேசிய விமானம்
கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து எம்எச் 370 விமானம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங் நோக்கி பயணித்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் திடீரென விமானம் குறித்த தரவுகளை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கண்காணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. விமானம் எங்கே இருக்கிறது என்பதை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் இது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த விமானத்தில் மொத்தம் 227 பயணிகள் இருந்தனர். டேக் ஆஃப் ஆனதில் இருந்து 38 வது நிமிடத்தில் விமானத்துடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
Images are subject to © copyright to their respective owners.
தேடுதல் பணி
காணாமல்போன மலேசிய விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, சீனா, பிலிப்பைன்ஸ்,சிங்கப்பூர் மற்றும் வியட்னாமிய கடற்படையினர் ஈடுபட்டனர். மார்ச் மாதம் 8 ஆம் தேதி விமானம் காணாமல் போன நிலையில் சில வாரங்களில் அந்த விமானத்தின் பாகங்களை மீட்புப் படையினர் கண்டுபிடிக்க துவங்கினர். விமானத்தின் இடது புற இறக்கை ரியூனியன் தீவு அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் மொத்த விமானமும் எங்கே இருக்கிறது என்பது இன்னும் கேள்வியாகவே எஞ்சியுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி தெற்கு இந்திய பெருங்கடலில் மயமான மலேசிய விமானம் விழுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டில், மலேசியா தெற்கு இந்தியப் பெருங்கடலில் விமானத்தைத் தேடும் முயற்சியில் இறங்கியது. விமானத்தைக் கண்டுபிடித்தால் $ 70 மில்லியன் வரை செலுத்த அந்நாட்டு அரசு முன்வந்தது. ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. இந்த பணியில் Ocean Infinity நிறுவனத்துடன் மலேசிய அரசு இணைந்து ஈடுபட்டது.
Images are subject to © copyright to their respective owners.
9 ஆண்டுகள்
மலேசிய விமானம் மாயமாகி 9 ஆண்டுகள் ஆவதை தொடர்ந்து அந்த விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புதிய கோரிக்கையை அரசுக்கு முன்வைத்திருக்கின்றனர். அதன்படி Ocean Infinity நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் காணாமல்போன விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் அரசு இறங்க வேண்டும் என மலேசிய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
மற்ற செய்திகள்