“அடிக்கடி ஒரு பொண்ணு வரும்.. வீட்டுக்கு பின்னாடி மர்ம குடோன்!”.. 2007 சிறுமி காணாமல் போன வழக்கில் மிரளவைக்கும் திருப்பம்!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 2007-ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த மேட்லின் மெக்கேன் என்கிற சிறுமி போர்ச்சுகலில் காணாமல் போனார்.
இவ்வழக்கில் அதே ஆண்டு Christian Brueckner என்பவர் கைது செய்யப்பட்டார். அதன் பின் அவரது நண்பர் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின்படி, Brueckner ஜெர்மனியில் உள்ள தன்னுடைய தோட்டத்து வீட்டில் மதுபான போத்தல்களை சேமித்து வைக்கும் கிடங்கினை , தான் உருவாக்கி வைத்திருப்பதாக தெரிவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், ஜெர்மனியில் Christian Brueckner தங்கியிருந்த வீட்டின் அண்டை வீட்டுக்காரர் அளித்துள்ள வாக்குமூலத்தால் இந்த வழக்கு சூடு பிடித்துள்ளது. அதன்படி, “Bruecknerக்கு ஒரு வீடு இருந்தது, அது பின்னர் இடிக்கப்பட்டது. ஐரோப்பாவில் கொஞ்ச நாள் வாழ விரும்பியதால், தான் தங்கியிருந்த ஜெர்மன் வீட்டை அவன் பதிவு செய்யவில்லை. சில நேரங்களில் அவனுடன் ஒரு பெண் தங்கியிருப்பார், அவர் அவனின் காதலி என நினைத்துக்கொண்டேன். அவனை கடைசியாக பார்த்து நாளாகின்றன. அந்த மதுபான கிடங்கு இருப்பது உண்மைதான்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மேட்லினின் பெற்றோருக்காக, தான் வருந்துவதாகவும், நிச்சயம் மேட்லினுக்கு என்ன ஆயிற்று என்பன பற்றிய முக்கியத் தகவல்கள் விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்