பாய்ந்து வந்த ஏவுகணை...! 'டக்குனு அலெர்ட் ஆன நாடு...' இந்த 'வேலைய' செஞ்சது கண்டிப்பா 'அவங்க' தான்...! - கரெக்ட்டா 'அந்த இடத்த' டார்கெட் பண்ணிருக்காங்க...
முகப்பு > செய்திகள் > உலகம்எண்ணெய் கிடங்குகளின் சொர்க்க பூமியாக திகழும் சவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அந்நாடு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தங்கள் நாட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், 'சவுதியின் கிழக்கு பகுதிகளில் அதிகளவில் எண்ணெய் கிணறுகள் காணப்படும். அதனை அழிக்கும் பொருட்டு இந்த ஏவுகணை தாக்குதல் நடந்திருக்கலாம்.
தாக்குதலின் போது வந்த ஏவுகணையை தமாமில் புறநகர் பகுதியில் வைத்து முறியடித்தோம். ஆனால் அந்த ஏவுகணை வெடித்து சிதறியதில் இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்' எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஏவுகணை தாக்குதல் ஈரானைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டதாக சவுதி அரேபியா குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு முன்பு, ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அதுவும் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு, அராம்கோ ஆலைகளில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது எங்கள் நாட்டின் 50 சதவீத எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்