‘கொரோனாவுக்கு’ எதிராக களத்தில் குதித்த மிஸ் இங்கிலாந்து!.. தற்போது போடப்படும் தடுப்பூசியில் இவரது பங்கும் இருக்கு! என்ன செய்தார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக உலக அழகி பட்டம் பெற்ற எந்த பெண்ணும் நீச்சல் உடையில் அழகாக போஸ் கொடுப்பதும், அழகுசாதன விளம்பரங்களுக்கு மாடலாக இருப்பதுமாகவே இருப்பார்கள்.

‘கொரோனாவுக்கு’ எதிராக களத்தில் குதித்த மிஸ் இங்கிலாந்து!.. தற்போது போடப்படும் தடுப்பூசியில் இவரது பங்கும் இருக்கு! என்ன செய்தார் தெரியுமா?

அப்படி இல்லாவிடில் நல்லெண்ண தூதுவர்களாக உலகம் சுற்றி வருவதுண்டு. அதுவும் இல்லை எனில் சினிமாவில் ஹீரோயினாவது வழக்கம். ஆனால் மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்ற ஒருவர் இப்படி எல்லாம் செய்யாமல்  நிஜ ஹீரோவாக கொரோனாவுக்கு எதிராக போராட்ட களத்தில் குதித்துள்ளார் Dr Carina Tyrrell.

உலகிலேயே கொரோனாவுக்கு எதிராக, மக்களுக்கு தடுப்பூசி போட தொடங்கியுள்ள முதல்நாடாக பிரிட்டன் திகழும் நிலையில் இந்த சேவையில் முக்கிய பங்கு, அறிவியலாளரான மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்ற Dr Carina Tyrrell என்பவருக்கு உண்டு. பிரிட்டனில் அனைத்து விதமான வயதினருக்கும் பலதரப்பட்ட குடிமக்களுக்கும் இது தடுப்பூசி பாதுகாப்பானதாக என்பதை உறுதி செய்யக்கூடிய ஆக்ஸ்போர்டு குழுவில் முக்கியப் பணியில் இருந்த Dr Carina Tyrrell, உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர் மற்றும் மருத்துவர்களுடன் ஒன்றிணைந்து சரியான தடுப்பூசி மற்றும் சோதனைகளுக்காக நிதி உதவி கிடைப்பதையும் முடிவு செய்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தயாராகிக் கொண்டிருக்கும் அனைத்து விதமான தடுப்பூசிகளையும் ஒப்பிட்டு பார்த்து மிகப்பொருத்தமான தடுப்பூசி எது என்பதை கண்டறியும் குழுவில் இருக்கும் Dr Carina Tyrrell,  pfizer moderna, oxford astrazeneca ஆகிய தடுப்பூசிகள் தொடர்பிலும் குழு பணியையும் ஆற்றியுள்ளார்.

இதுவரை MA, MB, BChir, MPH, Dr போன்ற பல பட்டங்களைப் பெற்றவரான  Carina Tyrrell உலக போட்டியில் 4வதாகத் தான் வந்தார் எனினும் இந்த இளம் வயதிலேயே உலக அழகி பட்டம் பெறாவிட்டாலும் இவரது இந்த செயலுக்காகவே இவர் உலக அழகிதான் என பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்