“பூட்டிய வீட்டுக்குள் தீ.. சாவியை எடுத்துச் சென்ற பெற்றோர்!”.. சிக்கிய சிறுவனும், தங்கையும்.. அதன் பிறகு நடந்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரான்சில் பிள்ளைகளை அடுக்கு மாடிக் குயிருப்பில் உள்ள அபார்ட்மெண்ட்டில் வைத்து பூட்டிய பெற்றோர், வெளியே போயிருந்த நிலையில், திடீரென வீடு தீப்பிடித்துள்ளது.

“பூட்டிய வீட்டுக்குள் தீ.. சாவியை எடுத்துச் சென்ற பெற்றோர்!”.. சிக்கிய சிறுவனும், தங்கையும்.. அதன் பிறகு நடந்த சம்பவம்!

ஆனால் வீட்டு சாவியை பெற்றோர் தங்களுடனே கொண்டு சென்றுவிட்டதால், வீட்டுக்குள் சிக்கிய சிறுவர்கள் ஜன்னல் வழியே காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று கதறியுள்ளனர்.  இவர்கள் கதறியதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குக் கீழே வந்து நின்றுகொண்டனர்.

அவர்கள் மீதிருந்த நம்பிக்கையில் அந்த வீட்டுக்குள் சிக்கியிருந்த 10 வயது சிறுவன், தனது 3 வயது சிறுமியை ஜன்னலை உடைத்து ஜன்னல் வழியே தூக்கிப் போட, கீழே நின்றுகொண்டிருந்தவர்கள் பிடித்துக்கொண்டு விட்டார்கள். சிறுமி காப்பாற்றப்பட்டார். இதேபோல் அடுத்து துணிச்சலுடன் குதித்த சிறுவனை கீழே நின்றவர்கள் பிடித்துக்கொண்டனர். சிறுவனும் இதனால் உயிர் தப்பினான். ஆனால் இவர்களை காப்பாற்றுவதற்காக பிடித்தவரகளுள் 2 பேருக்கு கை எலும்பு முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

TRENDING NEWS

மற்ற செய்திகள்