'இல்ல வேண்டாங்க, 'அது' வந்திடும்னு பயமா இருக்கு...' 'கைகுலுக்க மறுத்த மந்திரி...' 'அதிர்ச்சியடைந்த பிரதமர்...' வைரலாகும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் காரணமாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் அந்நாட்டு உள்துறை மந்திரி கை குலுக்க மறுத்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி உள்பட 73 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 3,125 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 90 ஆயிரத்து 931 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், மனிதரிடமிருந்து மனிதருக்கு நேரடியாக பரவும் இந்த வைரசை எவ்வாறு கட்டுப்படுத்துவது என தெரியாமல் விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியிலும் 158 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்து காணப்படுகின்றனர்.
இது தொடர்பாக தலைநகர் பெர்லினில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், உள்துறை மந்திரி ஹொர்ஸ்ட் சிஹொபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டம் தொடங்கும்போது அங்கு வந்த பிரதமர் ஏஞ்சலா, உள்துறை மந்திரியிடம் மரியாதை நிமித்தமாக கை குலுக்க தனது கையை நீட்டினார். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக உள்துறை மந்திரி ஹொர்ஸ்ட் சிஹொபர் பிரதமர் ஏஞ்சலாவுடன் கைகுலுக்க மறுத்துவிட்டார்.
இதனால் முதலில் அதிர்ச்சியடைந்த ஏஞ்சலா, சூழலை புரிந்துகொண்டு சிரித்து சமாளித்தபடி விலகி சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.