“உலகப்போருக்கு அப்றம் இப்போ தான் இப்படி”.. ஆவிகளுடன் பேசுபவர்களிடம் அதிகமாக செல்லும் மக்கள்!.. ‘சோக’ பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்திடீரென அன்புக்குரியவர்களின் திடீர் இழப்பை தாங்க முடியாமல் பிரிட்டனில் பலரும் ஆவிகளுடன் பேசுவோர்கள் மூலம் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பு கொள்ள முயன்று வருவதாக சில தகவல்கள் எழுந்துள்ளன.
லண்டனில் வாழும் 60 வயதான ஜிம் என்பவர், தம் மனைவியிடம் தனக்கு உடல் வலி இருப்பதாகவும், தமது தலைக்குள் ஏதோ இடிப்பது போல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் பின் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் 2 நாட்கள் கழித்து ஜிம் அவரது மனைவி கேட் என்பவரின் கண் முன்னே உயிரிழந்தார். இதனிடையே கேட்டுக்கும் கொரோனா இருந்ததால் உறவினர்கள் யாரும் இவரிடம் நெருங்கவே இல்லை. கணவரை பிரிந்து தனிமையில் வாடிய கேட், அப்போதுதான் ஆவிகளுடன் பேசுபவர்களை குறித்து நண்பர் சொன்னதைக் கேட்டு Dundee பகுதியில் வசிக்கும் June Field என்கிற பெண்ணை சந்தித்துள்ளார்.
அவரை சந்தித்த கேட், தன் கணவர் பயந்திருக்கிறாரா என June Field-டம் கேட்டுள்ளார். அவரும் பதிலுக்கு ‘உங்கள் கணவர் பயப்படவில்லை.’ என்று கூறியதும் கேட் நிம்மதி ஆகியுள்ளார். முதலாம் உலகப்போரில் தான் இப்படி அன்புக்குரியவர்களை இழந்த பலரும் ஆவிகளுடன் பேசுவோரை அணுகத் தொடங்கினர்.
அதற்கு அடுத்தபடியாக, இப்போது மீண்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஆவிகளுடன் பேசுவோரை அணுகத் தொடங்கியுள்ளனர்.
மற்ற செய்திகள்