"எங்கள மன்னிச்சுடுங்க"... போராட்டடத்துக்கு 'மத்தியில்'... கட்டித்தழுவி 'ஆறுதல்' சொல்லி... அசத்திய 'போலீசார்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் கறுப்பர் இனத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தை 9 நிமிடங்களுக்கு மேலாக தனது பூட்ஸ் காலால் போலீசார் ஒருவர் மிதித்த நிலையில் ஜார்ஜ் மரணமடைந்தார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்காக அமெரிக்காவில் கடும் போராட்டம் வெடித்தது.

"எங்கள மன்னிச்சுடுங்க"... போராட்டடத்துக்கு 'மத்தியில்'... கட்டித்தழுவி 'ஆறுதல்' சொல்லி... அசத்திய 'போலீசார்'!

போலீசார் வன்முறையில் ஈடுப்பட்டதால் தான் ஜார்ஜ் மரணமடைந்தார் என நாடு முழுவதும் பல பகுதிகளில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அதே வேளையில், இந்த மரணம் அமெரிக்காவில் நிகழும் நிறவெறிக்கு எதிரான போராட்டமாகவும் உருமாறியது.

இந்நிலையில், ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு மன்னிப்பு கோரி மியாமி போலீஸ்காரர்கள், போராட்டக்காரர்கள் முன்பு மண்டியிட்டனர். அது மட்டுமில்லாமல் அங்கிருந்த போராட்டக்காரர்களை கட்டி தழுவி தங்களது ஆறுதலையும் வெளிப்படுத்தினர். ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு காரணமான பொலிஸாரின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர்கள் தெரிவித்தனர். மியாமி காவல்துறையினர் மன்னிப்பு கேட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானதை தொடர்ந்து மியாமி போலீஸ்காரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

மற்ற செய்திகள்