Veetla Vishesham Mob Others Page USA

126 பயணிகளுடன் விமானம் தரையிங்கும்போது கேட்ட பயங்கர சத்தம்..கொஞ்ச நேரத்துல பரவிய தீ.. பரபரப்பான ஏர்போர்ட்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் தரையிறங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்ததால் அதிலிருந்த பயணிகள் அவசர அவசரமாக கீழே இறக்கப்பட்டுள்ளனர்.

126 பயணிகளுடன் விமானம் தரையிங்கும்போது கேட்ட பயங்கர சத்தம்..கொஞ்ச நேரத்துல பரவிய தீ.. பரபரப்பான ஏர்போர்ட்..!

Also Read | கிரெடிட் & டெபிட் கார்டு Use பண்றீங்களா.. அமலாகும் டோக்கனைசேஷன் நடைமுறை.. முழுவிபரம்..!

உடைந்த லெண்டிங் கியர்

டொமினிக்கன் குடியரசு நாட்டில் இருந்து கிளம்பி அமெரிக்காவில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது தீப்பிடித்திருக்கிறது. விமானத்தின் லெண்டிங் கியர்கள் உடைந்ததால் தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ விபத்தில் சிக்கிய பயணிகளில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரவிய தீ

டொமினிகன் குடியரசில் உள்ள புன்டா காசிடோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய Red Air 203 விமானம் அமெரிக்காவில் உள்ள மியாமி சர்வதேச நிலையத்தில் நேற்று மாலை 5.38 மணிக்கு தரையிறங்கியிருக்கிறது. இந்த விமானத்தில் 126 பயணிகளும் 11 பணியாளர்களும் இருந்துள்ளனர். தரையிறங்கும் போது, லெண்டிங் கியர்கள் உடையவே, வேறு வழியின்றி தரையில் உரசியபடி விமானத்தை தரையிறக்கியிருக்கிறார்கள் விமானிகள்.

இதைத்தொடர்ந்து, விமானத்தில் தீப்பிடிக்கவே, கொஞ்ச நேரத்தில் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டிருக்கிறது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட மியாமி விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதன் பலனாக தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

Miami International Airport fire Three people hospitalized

விபத்து

இதுகுறித்து பேசிய மியாமி விமான நிலையத்தின் செய்தித் தொடர்பாளர்,"  Red Air 203 விமானம் நேற்று மாலை தரையிறங்கிய போது, அதன் லெண்டிங் கியர் உடைந்திருக்கிறது. இதனால் கிராஷ் லெண்டிங் செய்யும் நிலைக்கு விமானிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இதன் காரணமாக விமானத்தில் தீ விபத்து ஏற்படவே, பாதுகாப்பு வீரர்கள் உடனடியாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் காயமடைந்த 3 பயணிகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்" என்றார்.

விபத்துக்குள்ளான இந்த விமானம் முன்னர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. 32 ஆண்டுகளாக சேவையில் இருக்கும் இந்த விமானத்தினை கடந்த 2015 ஆம் ஆண்டு டொமினிக்கன் குடியரசை சேர்ந்த ரெட் ஏர் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Also Read | கவுன்சிலர் டூ ஜனாதிபதி வேட்பாளர்..பழங்குடி பெண்ணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவித்த பாஜக.. யார் இந்த திரௌபதி முர்மு?

FLIGHT, FLIGHT FIRE, MIAMI INTERNATIONAL AIRPORT, MIAMI INTERNATIONAL AIRPORT FIRE

மற்ற செய்திகள்