‘திடீரென அதிகரித்த கொரோனா பரவல்’!.. கல்லறைக்கு அடுத்தடுத்து வரும் உடல்கள்.. கண்ணீருடன் விழி பிதுங்கி நிற்கும் நாடு..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மெக்சிகோவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘திடீரென அதிகரித்த கொரோனா பரவல்’!.. கல்லறைக்கு அடுத்தடுத்து வரும் உடல்கள்.. கண்ணீருடன் விழி பிதுங்கி நிற்கும் நாடு..!

சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 125 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 2.75 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

Mexico surpassed 200,000 test-confirmed deaths from COVID-19

தற்போது கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மெக்சிகோ நாட்டில் திடீரென கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

Mexico surpassed 200,000 test-confirmed deaths from COVID-19

இதுவரை அந்நாட்டில் 2.21 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய இரு நாடுகள் உள்ளன. அதில், அமெரிக்காவில் 5 லட்சத்தும் அதிகமான மக்களும், பிரேசிலில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Mexico surpassed 200,000 test-confirmed deaths from COVID-19

இந்த நிலையில் மெக்சிகோ நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. கல்லறைக்கு தினமும் உயிரிழந்தோரின் உடல்கள் அடுத்தடுத்து வருவதால், உறவினர்கள் கண்ணீரில் மூழ்கி உள்ளனர். இதனால் கொரோனா பரவலை தடுக்க அந்நாட்டு அரசு தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

மற்ற செய்திகள்