100 வயதான மரம்.. திடீர் முடிவெடுத்த அதிகாரிகள்.. கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திய மக்கள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மெக்சிகோ நாட்டில் 100 வயதான பனைமரத்தை அதிகாரிகள் அகற்ற முடிவெடுத்ததை அடுத்து பொதுமக்கள் விழா நடத்தி மரத்திற்கு பிரியாவிடை கொடுத்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

100 வயதான மரம்.. திடீர் முடிவெடுத்த அதிகாரிகள்.. கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திய மக்கள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!

Also Read | இதுனால தான் டிவிட்டர வாங்குனாரா.. எலான் மஸ்க் போட்ட ட்வீட்.. பல சம்பவம் இருக்கு போலயே..!

மனிதர்கள் ஆதிகாலம் முதலே சுற்றுச் சூழலுடன் இணைந்து வாழவே விருப்பம் கொண்டிருக்கின்றனர். பல்லாயிரம் கோடி ஆண்டு வரலாற்றில் மரங்களும் செடிகளும் நமது ரத்தத்தில் கலந்த உறவாகி போயிருக்கிறது. நகரமயமாக்கல் போன்ற பல சிக்கல்களை இன்று நாம் சந்தித்தாலும் நமது வீட்டில் ஒரு சிறிய பூச்செடியையாவது வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பது இந்த ஆதிகால பந்தத்தின் காரணமாகத்தான். அந்த வகையில் தென்னமெரிக்க நாடான மெக்சிகோவில் நூறு வயது பழமையான மரத்தை அதிகாரிகள் அகற்ற இருந்த வேளையில் அந்த மரத்தை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தி இருக்கிறார்கள் உள்ளூர் மக்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்டு வருகிறது.

Mexico People Conduct Farwell Party for 100 year old palm tree

100 வயதான பனைமரம்

மெக்சிகோ நகரத்தின் மிகவும் பரபரப்பான பகுதி பாசியோ டி லா ரிஃபோர்மா. இந்த இடத்திற்கு அடையாளமாக இருந்த 100 ஆண்டுகள் பழமையான மரத்தினை அங்குள்ள அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். வயதாகிவிட்டதால் எப்போது வேண்டுமானாலும் மரம் முறிந்து விழக்கூடிய நிலையில் இருப்பதாகவும் அதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் இந்த மரத்தினை அகற்றும் பணிகள் நடைபெற்றன.

இதுகுறித்து பேசிய மெக்சிகோ நகர மேயர் கிளாடியா ஷீன்பாம்,"நிபுணர்கள் தலையிட்ட போதிலும், அதைக் காப்பாற்ற முடியவில்லை, அவ்வளவுதான், பனை மரம் இறந்துவிட்டது, அது இந்த இடத்தில் இருக்க முடியாது, ஏனெனில் இது பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்" என்றார்.

Mexico People Conduct Farwell Party for 100 year old palm tree

விழா

பல்லாண்டுகளாக இந்த இடத்தின் நினைவு சின்னமாக இருந்த மரத்தினை அகற்ற அதிகாரிகள் முடிவெடுத்ததை தொடர்ந்து, அங்குள்ள பொதுமக்கள் மிகவும் கவலை அடைந்தனர். பூங்கொத்துக்களை  வைத்து அதனை கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்தியிருக்கிறார்கள் இந்த நகர மக்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த மரம் மரம் நெசாஹுவால் கொயோட்ல் நர்சரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே சிகிச்சை  பெற இருப்பதாகவும் அதன்பிறகு இளம் கலைஞர்களின் கைவண்ணத்தில் கண்காட்சிப் பொருளாக இம்மரம் மாற்றப்பட இருப்பதாகவும் மெக்சிகோ அரசு தெரிவித்துள்ளது.

Mexico People Conduct Farwell Party for 100 year old palm tree

100 ஆண்டுகளாக நகரத்தின் அங்கமாக இருந்துவந்த மரத்தினை பிரிய மனமில்லாமல் மெக்சிகோ மக்கள் கண்ணீர் சிந்தியது காண்போரை கலங்க வைத்திருக்கிறது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

MEXICO, MEXICO PEOPLE, MEXICO PEOPLE CONDUCT FARWELL PARTY, OLD PALM TREE, 100 வயதான மரம், மெக்சிகோ

மற்ற செய்திகள்