'ரஷ்யா கண்டுபிடிச்ச தடுப்பூசிய...' 'நாங்க வாங்குறோம்...' - அறிவிப்பை வெளியிட்ட இரு நாடுகள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்தை வாங்க முயற்சியில் ஈடுபட்டுள்ளது மெக்சிகோ மற்றும் கஜகஸ்தான்.

'ரஷ்யா கண்டுபிடிச்ச தடுப்பூசிய...' 'நாங்க வாங்குறோம்...' - அறிவிப்பை வெளியிட்ட இரு நாடுகள்...!

ரஷ்யா அரசு, தங்கள் நாடு கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 மருந்தை கொரோனா தடுப்பு மருந்தாக அறிவிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதேபோல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஸ்புட்னிக்-5 மருந்தை தன் மகளுக்கு செலுத்தி சோதனை செய்ததாகவும் அந்த சோதனை வெற்றி பெற்றதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஷ்யா, மூன்றரை கோடி டோஸ் அளவிலான தடுப்பு மருந்தை மெக்சிகோ நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.

மேலும் தற்போது மெக்சிகோ மட்டுமல்லாமல் கஜகஸ்தானும் முதற்கட்டமாக 2 கோடி டோஸ் ஸ்புட்னிக்-5 மருந்தை வாங்க போவதாகவும், இந்த மருந்து நல்ல முன்னேற்றத்தை அளித்தால் மேலும் 5 கோடி டோஸ் வாங்க கஜகஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்