புதுசா கட்டுன பாலத்தை திறக்க போன மேயர்.. சடார்னு முறிஞ்சு விழுந்த புதுப்பாலம்..வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

மெக்சிக்கோவில் புதிதாக கட்டப்பட்ட பாலம் ஒன்று திறப்பு விழாவின்போது இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதுசா கட்டுன பாலத்தை திறக்க போன மேயர்.. சடார்னு முறிஞ்சு விழுந்த புதுப்பாலம்..வைரல் வீடியோ..!

புது பாலம்

மெக்சிகோ நாட்டின் மொரிலொஸ் மாகாணத்தில் ஹர்வவசா நகரில் புதிதாக பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. மரக்கட்டை மற்றும் இரும்பு ஆகியவற்றால் இந்த பாலம் கட்டப்பட்டிருக்கிறது. மெக்சிக்கோவின் குர்னவாகா நகர மேயர் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த பாலத்தை திறந்து வைத்திருக்கிறார். அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் உடன் பாலத்தில் நடந்து சென்ற மேயருக்கு கொஞ்ச நேரத்தில் அதிர்ச்சி காத்திருந்தது.

முறிந்த பாலம்

புதிதாக கட்டப்பட்ட பாலத்தை மேயர் பார்வையிட்டு கொண்டிருந்த போது, பலத்த சத்தத்துடன் பாலம் இடிந்து கீழே விழுந்திருக்கிறது. இதனால், நகர மேயர், அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் என பாலத்தில் நின்றிருந்த 10க்கும் மேற்பட்டோர் கீழே 10 அடி பள்ளத்தில் விழுந்தனர்.  இதனையடுத்து போலீசார் மற்றும் மீட்புப்படை வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவனையில் சேர்த்துள்ளனர். குர்னவாகா நகர மேயர் ஜோஸ் லூயிஸ் யூரியோஸ்டெகுயி-க்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

குர்னவாகா அமைந்துள்ள மோரேலோஸ் மாநிலத்தின் கவர்னர் குவாஹ்டெமோக் பிளாங்கோ இந்த விபத்து பற்றி பேசுகையில், "மேயர் ஜோஸ் லூயிஸ் யூரியோஸ்டெகுயின் மனைவி மற்றும் செய்தியாளர்கள் பாலம் விழுந்தபோது அதில் இருந்தனர். அவர்களது உடல்நலம் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்.

வைரல் வீடியோ

நதி படுகையில் அமைக்கப்பட்ட இந்த நடைபாலம், சுற்றுலாவாசிகளை கவரும் நோக்கில் கட்டப்பட்டது. மரம், இரும்பு கம்பிகள் மற்றும் செயின்கள் மூலமாக அமைக்கப்பட்ட இந்த மேம்பாலம் பாரம் தாங்காமல் கீழே விழுந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், புதுப்பாலத்தினை திறக்க மேயர் சென்றிருந்த வேளையில், பாலம் இடிந்து கீழே விழுந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

MEXICO, BRIDGE, COLLAPSE, மெக்சிக்கோ, பாலம், வீடியோ

மற்ற செய்திகள்