"இடி இடிக்கிற மாதிரி சத்தம் கேட்டுச்சு.. அப்போதான் வானத்துல அதை பார்த்தோம்.." அதிகாலையில் நடந்த சம்பவத்தால் அலறிய பொதுமக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்சிலி நாட்டில் விண்கல் ஒன்று பிரகாசமாக வானில் தோன்றிய புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விண்வெளியில் சூரியனை பிற கோள்கள், சூரியனை சுற்றிவருவதை போலவே விண்கற்களும் விண்வெளியில் பல்லாயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து வருகின்றன. இவை சில சமயங்களில் புவியின் ஈர்ப்பு விசையால் பாதிக்கப்பட்டு புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைவதுண்டு. அப்படி பூமியின் வளமண்டலத்திற்குள் நுழையும் விண்கற்கள் காற்றில் அதிவேகத்துடன் உராய்வதால் தீப்பிடித்து வானிலேயே சாம்பலாகி விடுவதுண்டு.
ஆனால், அவற்றிலிருந்து தப்பி பூமிப் பரப்பை அடையும் விண்கற்கள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். ஆனால், அதிர்ஷ்டவசமாக பூமியில் கடற்பரப்பு அதிகம் என்பதால் இதுபோன்ற விண்கற்கள் கடலில் விழவே வாய்ப்புண்டு. அந்த வகையில் சிலி நாட்டில் விண்கல் ஒன்று வானில் தோன்றியிருக்கிறது.
விண்கல்
சிலி நாட்டின் தலைநகரான சாண்டியாகோ-வில் தான் இந்த காட்சி தோன்றியிருக்கிறது. கான்செப்சியன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இந்த நிகழ்வு ஜூலை 7 ஆம் தேதி நடைபெற்றதாகவும் வானில் எரியும் பாறை ஒன்று தோன்றியதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். ஆண்டிஸ் பகுதியில் இவை உடைந்து சுக்குநூறாக சிதறி வானத்திலே மறைந்துவிட்டதாகவும் நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர். சிலி வானியல் அமைப்பைச் சேர்ந்த வானியலாளர் ஜுவான் கார்லோஸ் பீமின், சாண்டியாகோவை கடந்த விண்கல் "T12.cl" என பெயரிடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இடி
ஜூலை 7 ஆம் தேதி காலை 5.44 மணிக்கு இந்த எரியும் பாறை வானில் தோன்றியிருக்கிறது. பொதுமக்கள் இதுபற்றி பேசுகையில்," வானில் இடி இடிப்பது போல இருந்தது. அதன்பிறகு பிரகாசமான ஒளி தோன்றியது. அப்போது தான் நாங்கள் அதனை பார்த்தோம். எரிந்த நிலையில் அதிவேகமாக ஒரு பொருள் வானில் சென்றது" என்றனர். விண்கல் வளிமண்டலத்திற்குள் நுழைந்த பின்னர் காற்றுடன் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் எனவும் 10,000 கிலோமீட்டர் வேகத்தில் இந்த விண்கல் பயணித்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் ஜுவான் தெரிவித்திருக்கிறார்.
சாண்டியாகோவில் தோன்றிய இந்த விண்கல், அங்குள்ள சில சிசிடிவி கேமராக்களால் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகின்றன.
மற்ற செய்திகள்