ஒரே நேரத்துல பறந்த லட்சக்கணக்கான பறவைகள்.. சிலிர்த்துப்போன நெட்டிசன்கள்.. உலக வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கென்யாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பிளெமிங்கோ பறவைகள் பறந்து செல்லும் வியப்பூட்டும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

ஒரே நேரத்துல பறந்த லட்சக்கணக்கான பறவைகள்.. சிலிர்த்துப்போன நெட்டிசன்கள்.. உலக வைரல் வீடியோ..!

கிழக்கு ஆப்பிரிக்க தேசம் கென்யா. இங்குள்ள போகோரியா ஏரி (Lake Bogoria National Reserve) உலக பிரசித்தி பெற்றது. அதற்கு காரணம் இங்கு வரும் பறவைகள் தான். 32 சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ள இந்த நீர் பரப்பு ஏராளமான பறவைகளை ஈர்க்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இங்கே பறவைகள் வந்து செல்கின்றன. இதனை காணவே லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகிறார்கள். கென்யாவின் வட திசை மலைச் சரிவுகளில் பாயும் வசேஜஸ் ஆறு இந்த ஏரியில் கலக்கிறது.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு -  அக்டோபர் மாதங்களில் இங்கே லட்சக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் வருகின்றன. இளம் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த பறவைகள் வரும் நேரத்தில் இதனை பார்வையிட மக்களும் ஆர்வத்துடன் இப்பகுதிக்கு செல்கின்றனர். இந்தப் பகுதியில் வெப்ப நீரோட்டம் இருப்பதாலும், இப்பகுதியின் காலநிலை காரணமாகவும் இந்த பறவைகள் பல்வேறு கண்டங்களில் இருந்து பறந்து இங்கு வருகின்றன.

பிளமிங்கோ பறவைகளும் ஒற்றைக்காலில் நின்றபடி இரையை வேட்டையாடுவதில் அதீத திறமை படைத்தவை. இவை பெரும்பாலும் கூட்டமாகவே வசிக்கும் இயல்பு கொண்டவை. கென்யாயாவின் போகோரியா ஏரிக்கு ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில் பல லட்சக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் வந்து செல்கின்றன.

இந்நிலையில், தற்போது பரவி வரும் இந்த வீடியோவில் போகோரியா ஏரியின் கரையில் இருந்து லட்சக்கணக்கான பிளமிங்கோ பறவைகள் கூட்டமாக பறந்து செல்கின்றன. இந்த காட்சி டிரோன் மூலம் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோவை ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்து "30 லட்சம் பிங்க் பிளமிங்கோ கென்யா" என குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ இதுவரையில் 2 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கிறது. மேலும், 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்திருக்கின்றனர். "இது நான் பார்த்ததிலேயே மிகச் சிறந்த வீடியோ" என்றும், "ஒரே நேரத்தில் பறவைகள் பறந்து செல்வதை பார்க்குமோது வார்த்தைகளே வரவில்லை" என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 

FLAMINGO, BIRD, KENYA

மற்ற செய்திகள்