"அது நெனச்சுப்பார்க்க முடியாத வலி".. பில்கேட்ஸ்-ன் முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ் உருக்கம்.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பில் கேட்ஸ்-ன் மனைவி மெலிண்டா கேட்ஸ் முதன்முறையாக தங்களது விவாகரத்து பற்றி மனம் திறந்திருக்கிறார்.
Also Read | நெனச்சதை சாதிச்ச எலான் மஸ்க்.. முடிவிற்கு வரும் நீண்டநாள் போராட்டம்.. முழு விபரம்..!
பில் கேட்ஸ்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 1955 ஆம் ஆண்டு பிறந்த பில் கேட்ஸ் உலக புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினை துவங்கியவர்களில் ஒருவராவார். இளம் வயதிலேயே புரோகிராமிங் செய்வதில் வல்லவராக திகழ்ந்த பில் கேட்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் போதே அவரது நண்பர் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி துவங்கினார்.
தொடர்ந்து 12 முறை முதலிடத்தில் இருந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. போர்ப்ஸ் இதழின் அடிப்படையில் இவர் உலகின் ஐந்தாவது பணக்காரராக இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 105 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். மனிதாபிமான சேவைகளையும் உலகம் முழுவதிழும் தனது அறக்கட்டளை மூலமாக பில் கேட்ஸ் செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையை பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுடன் இணைந்து துவங்கினார்.
விவாகரத்து
1994 ஆம் ஆண்டு மெலிண்டாவை கரம் பிடித்தார் பில் கேட்ஸ். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். திருமணமாகி 27 வருடம் கழிந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றனர். அந்த வருட ஆகஸ்டில் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இருப்பினும் அறக்கட்டளையை தனது முன்னாள் மனைவி மெலிண்டாவுடன் இணைந்து நடத்த இருப்பதாக அறிவித்தார் கேட்ஸ்.
விவாகரத்திற்கு பிறகு, அதுகுறித்து இருவருமே பொதுவெளியில் பேசாத நிலையில் தற்போது மனம் திறந்திருக்கிறார் மெலிண்டா கேட்ஸ். அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் பில் கேட்ஸ் உடனான விவாகரத்து நினைத்துப்பார்க்க முடியாத வலியை கொடுத்தாக தெரிவித்திருக்கிறார்.
பிரிவு
இதுகுறித்து பேசிய அவர்,"சில காரணங்களால் என்னால் திருமண வாழ்க்கையை தொடர முடியவில்லை. கொரோனா காலத்தில் எனக்கு தேவையான தனிமை கிடைத்தது. நாங்கள் இருவரும் இணைந்தே அறக்கட்டளையை நடத்தினோம். ஆகவே, அலுவல் ரீதியான பிரிவும் அவ்வளவு எளிதாக இல்லை. நான் பிரியவேண்டிய நபருடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருந்தது. சில நேரங்களில் காலை 9 மணிக்கு நான் அழுதுகொண்டிருப்பேன். அடுத்த ஒருமணி நேரத்தில் அவரிடம் வீடியோ கான்ஃபிரன்சில் பேச வேண்டியிருக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் என்னுடைய தனித்துவமான உழைப்பை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" எனத் தெரிவித்திருக்கிறார்.
மற்ற செய்திகள்