சொன்னா கேளுங்க.. அதை ‘ஒத்துக்கோங்க’.. மனைவி சொன்ன ‘அட்வைஸ்’.. பிடிவாதம் பிடிக்கும் டிரம்ப்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் படுதோல்வியை சந்தித்தார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஜோ பைடன் மற்றும் குடியரசுக் கட்சியின் சார்பாக டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டனர். பெரும் இழுபறியாக நடந்த வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் முடிவு பெற்றது. அதில் ஜோ பைடன் 290 தொகுகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் 214 தொகுதிகளை கைப்பற்றி தோல்வியை சந்தித்தார்.
ஆனால் இதுவரை இந்த தோல்வியை டிரம்ப் ஒப்புக்கொள்ளவில்லை. ஜனநாயகக் கட்சியினர் வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்துவிட்டனர் என குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில் அதிபர் தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ளுமாறு டிரம்பின் மனைவி மெலனியா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை டிரம்பிடம் தனிமையில் கூறியதாக CNN தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. வழக்கமாக பல விவகாரங்களில் தனது கருத்தை டிரம்பிடம் அவர் தனிமையில் தெரிவிப்பதை போல் அதிபர் தேர்தல் முடிவு குறித்தும் கருத்து கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் டிரம்பின் மருமகனும், மூத்த அரசியல் ஆலோசகருமான ஜாரெட் குஷ்னரும் இதையே டிரம்பிடம் வலியுறுத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் வெளியேறியதும் அவரை மெலனியா விவகாரத்து செய்ய உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
மற்ற செய்திகள்