"கடைசிவரை போராடி பார்த்தோம்".. கடலில் மூழ்கிய பிரம்மாண்ட சொகுசு கப்பல்.. உலக அளவில் வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > உலகம்இத்தாலியில் பிரம்மாண்ட சொகுசு கப்பல் ஒன்று கடலில் மூழ்கிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Also Read | குழந்தைகளுக்கு பரவும் 'தக்காளி காய்ச்சல்'.. மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கிய அவசர அட்வைஸ்.. முழுவிபரம்..!
பழுது
ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ளது கட்டன்சாரோ மெரினா கடற்கரை. இங்கே கடந்த 22 ஆம் தேதி பயணித்துக்கொண்டிருந்த சொகுசு கப்பல் ஒன்று பழுதடைந்திருக்கிறது. இதனையடுத்து உள்ளூர் கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து விரைந்து சென்ற மீட்புப் படையினர் கப்பலில் சிக்கிய பயணிகள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றினர். இதனிடையே கப்பல் கடலில் மூழ்கியிருக்கிறது. இதனை கடலோர காவல்துறை அதிகாரி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தகவல்
'மை சாகா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சொகுசு கப்பல் 40 மீட்டர் நீளம் கொண்டது. 2007 ஆம் ஆண்டு இத்தாலியில் இந்த கப்பல் கட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில். கலிபோலியிலிருந்து மிலாசோவுக்கு செல்லும் வழியில் இந்த கப்பல் மூழ்கியிருக்கிறது. இதில் கேமன் தீவுகளின் கொடி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கப்பல் மூழ்கியதற்கு முந்தைய தின இரவில் குரோடன் துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் கப்பலின் சில பகுதிகளில் நீர் புகுந்திருப்பதாக கப்பலில் இருந்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனையடுத்து குரோடனை சேர்ந்த மீட்பு படகு ஒன்றும், ரோமானிய மீட்பு படகு ஒன்றும் கப்பலுக்கு அருகில் சென்றிருக்கிறது. அதில் இருந்த வீரர்கள் கப்பலில் தத்தளித்த பயணிகளை மீட்டிருக்கிறார்கள்.
இழுவை படகு
விடியற்காலையில், குரோடோனிலிருந்து ஒரு இழுவைப் படகு வந்து கப்பலை குரோடோனை நோக்கி இழுக்கத் தொடங்கியது. ஆனால், வானிலை மோசமானதால் இந்த பணியில் தொய்வு ஏற்பட்டது. மேலும், மை சாகா கப்பலுக்குள் ஏற்கனவே நீர் புகுந்திருந்ததால் அதனை துறைமுகம் நோக்கி இழுப்பதும் சவாலாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய அதிகாரிகள்,"இழுவை படகு மூலமாக கப்பலை கரைக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் பலனிக்கவில்லை. எவ்வளவோ முயன்றும் வானிலை மோசமானதால் கப்பலை மீட்க முடியவில்லை. இருப்பினும் அதில் இருந்த இத்தாலியை சேர்ந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்" என்றார். இந்நிலையில், பிரம்மாண்ட சொகுசு கப்பல் கடலில் மூழ்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Nei giorni scorsi, la #GuardiaCostiera di #Crotone ha coordinato operazioni di salvataggio di passeggeri ed equipaggio di uno yacht di 40m, affondato a 9 miglia al largo di #CatanzaroMarina.
Avviata inchiesta amministrativa per individuarne le cause. #SAR #AlServizioDegliAltri pic.twitter.com/kezuiivqsM
— Guardia Costiera (@guardiacostiera) August 22, 2022
மற்ற செய்திகள்