பல கிலோமீட்டர் தூரத்துக்கு ‘மாபெரும்’ சிலந்தி வலை.. மிரண்டுபோன மக்கள்.. ஆய்வாளர்கள் சொன்ன காரணம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆயிரக்கணக்கான சிலந்திகள் ஒன்றுகூடி பல கிலோமீட்டர் தூரத்துக்கு வலை பின்னியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா விக்டோரியா மாகாணத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது அப்பகுதிகளில் வெள்ளம் முற்றிலுமாக வடிந்துள்ள நிலையில், மாபெரும் சிலந்தி வலை அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கிப்ஸ்லேண்ட் என்ற இடத்தில் மெல்லிய பட்டாடை போல பல கிலோமீட்டர் தூரத்துக்கு சிலந்தி வலை பின்னப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான சிலந்திகள் ஒன்றிணைந்து இதனை கட்டி வருகின்றன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், இதுதொடர்பாக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், கனமழையால் ஏற்படும் வெள்ள நீரில் மூழ்காமல் இருக்க சிலந்திகள் இதனை கட்டி வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போது அங்கு குளிர்ந்த வானிலை நிலவி வருவதால், ஆயிரக்கணக்கான சிலந்திகள் ஒன்றிணைத்து வேகமாக வலை பின்னி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்