‘கொரோனா அச்சத்திற்கு இடையே’... ‘மக்களை அதிர வைத்த சம்பவம்’... ‘ உறைய வைக்கும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா அச்சம் காரணமாக வீட்டில் முடங்கி கிடக்கும் நைஜர் நாட்டு மக்களை, மேலும் ஒரு சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

‘கொரோனா அச்சத்திற்கு இடையே’... ‘மக்களை அதிர வைத்த சம்பவம்’... ‘ உறைய வைக்கும் வீடியோ!

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால், பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தநிலையில், மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டின் தலைநகர் நியாமி நகரத்தில் திங்கள்கிழமை மதியம் பல நூறு கிலோ மீட்டர் உயரத்திற்கு மணல் புயல் வீசியது. வானம் ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் காட்சியளித்து மிரட்சியை ஏற்படுத்தியது. இந்த புயலால், கட்டிடங்கள் அனைத்தும் சிவப்பு நிற தூசுகளால் மூடப்பட்டன.

பல நூறு மீட்டர் உயரத்துக்கு வீசிய மணல் புயலால், அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த புயல் அங்கு சில நிமிடங்கள் நீடித்தது. இந்த புயலால் நகரமே சிவப்பு நிறமாக தோற்றமளித்தது. இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்தப் புயல் காரணமாக விமானப் போக்குவரத்து அங்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை நீடிக்கும் வறண்ட காலங்களில் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் மணல் புயல்கள் வீசுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், தற்போது கொரோனா அச்சத்தில் மக்கள் இருக்கும் நேரத்தில் இந்த மணல் புயல் அந்நகர மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து கூறும் ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு, இந்த மணல் புயலால் ஏற்படும் மாசுக்கள் மக்களின் உடல் உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இதனால் மூளைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் கூட வரலாம் என கூறி திகைக்க வைத்துள்ளது.