The Legend
Maha Others

மலை மாதிரி எழுந்த மணல்புயல்.. ரோட்ல சிக்கிய பயணிகள்.. உலக அளவில் திகைப்பை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சீனாவில் கடந்த வாரம் கடுமையான மணற்புயல் ஏற்பட்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் அதிக அளவில் பரவி வருகிறது.

மலை மாதிரி எழுந்த மணல்புயல்.. ரோட்ல சிக்கிய பயணிகள்.. உலக அளவில் திகைப்பை ஏற்படுத்திய வீடியோ..!

Also Read | 'என்னோட ஹீரோ".. ஆனந்த் மஹிந்திரா போட்ட வைரல் ட்வீட்.. யாருப்பா இவரு..?

சீனாவில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக கடுமையான வெப்பம் தாக்கி வருகிறது. இதனால் சீனாவில் பாலைவன பகுதிகள் மனிதர்கள் செல்ல முடியாத பிரதேசமாகி இருக்கின்றன. இந்நிலையில், வடக்கு சீனாவில் உள்ள கிங்காய் மாகாணத்தில் கடந்த வாரம் பலமான மணற்புயல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

மணல்புயல்

இந்த மணற்புயல் காரணமாக 200 மீட்டருக்கு தொலைவில் இருப்பவற்றை மக்கள் பார்க்க முடியாதபடி மணல் சூழ்ந்திருக்கிறது. சில இடங்களில் நிலைமை இன்னும் மோசமாகி சூரியனையே மறைத்துவிட்டதாக கூறுகிறார்கள் உள்ளூர் மக்கள். கிங்காய் மாகாணத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் எதிரே மணல்புயல் உருவாவதை கண்டு திகைத்திருக்கின்றனர். இதனால் தங்களது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, புயல் கடக்கும் வரையில் காத்திருந்திருக்கின்றனர்.

மலை போல எழுந்த மணற்புயல் காதை பிளக்கும் சத்தத்துடன் வீசியிருக்கிறது. அச்சமூட்டும் வகையில் வீசிய மணல்புயலை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பதிவிட அது தற்போது வைரலாகி இருக்கிறது. இந்த புயலினால் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என சீன அரசு அறிவித்திருக்கிறது. இருப்பினும் மணல்புயல் ஏற்படும் வேளையில் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு உடனடியாக செல்லும்படி அறிவுறுத்தி வருகின்றனர் பாதுகாப்பு அதிகாரிகள்.

Massive Sandstorm Ripping Through Northwest China

போக்குவரத்து

இந்த புயல் சுமார் நான்கு மணிநேரம் நீடித்திருக்கிறது. ஹைக்ஸி மங்கோலிய மற்றும் திபெத்திய தன்னாட்சி மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். புயலால் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்ததால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

 

ஜூன் நடுப்பகுதியில் இருந்து, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய சீனாவின் பெரும் பகுதிகள் அதிக வெப்பநிலையை எதிர்கொண்டு வருகின்றன. இதேபோல ஐரோப்பாவிலும் வெப்பநிலை கடுமையாக உயர்ந்துவருகிறது. ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் வெப்பம் காரணமாக காட்டுத் தீ பரவியுள்ளது. வரும் ஆண்டுகளில் வெப்ப அலைகள் அடிக்கடி ஏற்பட்டு அவை தீவிரமாக மாறும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Also Read | காதலியை Impress பண்ண இளைஞர் செஞ்ச காரியம்.. அலேக்காக தூக்கிய போலீஸ்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!

CHINA, NORTHWEST CHINA, SANDSTORM, சீனா, மணல்புயல்

மற்ற செய்திகள்