துருக்கியைத் தொடர்ந்து இந்த நாடுகளிலுமா.? அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்.. உச்சகட்ட பதற்றத்தில் மக்கள்..!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஆசிய நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்று (பிப்ரவரி 23) அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் அம்மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

துருக்கியைத் தொடர்ந்து இந்த நாடுகளிலுமா.? அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்.. உச்சகட்ட பதற்றத்தில் மக்கள்..!!

                           Images are subject to © copyright to their respective owners.

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகரில் இருந்து 265 கிலோமீட்டர் தூரத்தில் இன்று காலை 6.07 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நிலநடுக்க அதிர்வு கைகாணிப்பு மையம் தெரிவித்திருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 113 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஜிகிஸ்தானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து 5.0 ரிக்டர் அளவிலும் 4.6 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலச்சரிவு, பனிச்சரிவு மற்றும் கடுமையான பனிப்பொழிவு போன்ற இயற்கை பேரழிவுகள் அதிக அளவில் ன் நடைபெறும் இடம் இது என்பதால் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், சீனாவின் Xinjiang Uygur  மாகாணத்திலும் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க கண்காணிப்பு மையமான CENC தெரிவித்திருக்கிறது.

மத்திய கிழக்கு நாடான துருக்கியில் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அண்டை நாடுகளான சிரியா உள்ளிட்ட நாடுகளில் பெரும் சேதம் ஏற்பட்டது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் 40000 ஐ கடந்திருக்கிறது.

இதனையடுத்து நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனிடையே, ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் சீனாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பது உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

EARTH QUAKE, AFGHANISTAN, TAJIKISTAN, CHINA

மற்ற செய்திகள்