உலகிலேயே மிகப் பெரிய ‘555 காரட்’ கருப்பு நிற வைரம்.. விண்கல் மோதி.. வெளியான சுவாரஸ்யமான தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகின் மிகவும் அரியவகை கருப்பு நிற வைரக்கல் முதல் முறையாக மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய வைரமாக கருதப்படும் கருப்பு நிற வைரக்கல் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. 555 கேரட் எடையுள்ள இந்த வைரம் சுமார் 260 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் அல்லது சிறுகோள் பூமியில் மோதி உருவாகியிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கருப்பு நிற வைரத்திற்கு ‘எனிக்மா’ என ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். சில நாட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட பின்னர், இந்த வைரம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கும் சில நாட்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இதன்பின்னர் வரும் பிப்ரவரி 3-ம் தேதி ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
55 முகங்கள் கொண்ட இந்த வைரம் இந்திய மதிப்பில் சுமார் 37 கோடி ரூபாய்க்கு மேல் விலை போக வாய்ப்புள்ளதாக ஏல நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரம் இதற்கு முன் யாரிடம் இருந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.
இதுகுறித்து தெரிவித்த வைரத்தை ஏலம் விடும் சோதேபி ஸ்டீபன் என்பவர், ‘இவ்வளவு பெரிய கருப்பு வைரம் மிகவும் அரிதான ஒன்றுதான். இது எப்படி உருவாகி இருக்கும் என்பது மர்மமாகவே உள்ளது. பூமியின் மீது சிறுகோள் ஒன்று மோதியதால் இந்த கருப்பு வைரம் உருவாகியிருக்கலாம் என நான் கருதுகிறேன். இது மொத்தம் 55 முகங்களைக் கொண்டதாக உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்