‘சொந்த வீட்டுக்குள்ளேயே எதிரியா? ’... ‘ட்ரம்ப் தோல்வியை உற்சாகமாக கொண்டாடும் குடும்ப நபர்’... ‘வைரலாகும் ட்வீட்’...!!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்ததை அவரது அண்ணன் மகள் ஷாம்பெயினுடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.

‘சொந்த வீட்டுக்குள்ளேயே எதிரியா? ’... ‘ட்ரம்ப் தோல்வியை உற்சாகமாக கொண்டாடும் குடும்ப நபர்’... ‘வைரலாகும் ட்வீட்’...!!!

அமெரிக்காவில் தற்போது நடந்த தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியுற்றார். தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்து அவர், வெள்ளை மாளிகை விட்டு வெளியேறாமல் பிடிவாதம் பிடித்து வருகிறார்.

இந்நிலையில், ட்ரம்பின் அண்ணன் மகளான மேரி எல் ட்ரம்ப், பைடனின் வெற்றியை கையில் ஷாம்பெயினுடனும், தொப்பியில் பைடன், ஹாரிஸ் என்று பதிவிட்டு, உற்சாகமாக கொண்டாடிய போட்டோ வைரலாகி வருகிறது. இது பலருக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.

மேரி எல் ட்ரம்ப், பைடனுக்கு ஆதரவான கருத்துக்களையே தொடர்ந்து தெரிவித்து வருகிறார். மேலும், தேர்தல் முடிவடைந்து பைடன் வெற்றி பெற்ற நாளில், ‘எல்லோரும்  நிம்மதியாக தூங்குங்கள்’ என்றும், ‘அமெரிக்கர்களுக்கு நன்றி’ தெரிவித்தும் ட்வீட் செய்திருக்கிறார் மேரி எல் ட்ரம்ப்.

55 வயதான மேரி எல் ட்ரம்ப், அடெல்பி பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி படிப்பை முடித்தவர்.  சைக்காலஜிஸ்ட், தொழிலதிபர், எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட மேரி எல் ட்ரம்ப், ட்ரம்பை வெளிப்படையாக விமர்சிப்பவர்களில் ஒருவர். இந்த ஆண்டின் ஜூலை மாதம் இவர் எழுதிய ’Too Much and Never Enough’ எனும் புத்தகம் டொனால்டு ட்ரம்ப் பற்றியது. ட்ரம்ப் பலவீனமானவர். ஈகோ கொண்டவர். மோசடி செய்து படித்தவர்… என அதிலுள்ள பல விஷயங்கள் கடும் விமர்சனத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்