ஊழியர்களை ₹4 கோடி செலவுல டூர் அனுப்பிய BOSS.. தலை சுத்த வைக்கும் போனஸ் தொகை.. பின்னணியில் இருக்கும் சோக கதை..!
முகப்பு > செய்திகள் > உலகம்நிறுவன உரிமையாளர் ஒருவர் தனது பணியாளர்களை அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சொகுசு சுற்றுலா அனுப்பி வருகிறார். இதற்கு அவர் சொல்லும் காரணம் தான் பலரையும் திக்குமுக்காட செய்திருக்கிறது.
Also Read | கிரவுண்ட்ல பாண்டியாவை முறைத்த விராட் கோலி.. டக்குன்னு பாண்டியா செஞ்ச காரியம்..!
பொதுவாக பலருக்கும் சுற்றுலா செல்வது பிடிக்கும். வாழ்வின் அன்றாட அலுப்புகளில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்ளவும், மனதை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் சுற்றுலா உதவும். ஆனால், பணிபுரியும் இடத்தில் லீவு கிடைக்க வேண்டும். அதற்கான பட்ஜெட்டை ஒதுக்க வேண்டும். இப்படி அடுத்தடுத்து சிக்கல்கள் எழும். ஆனால், நாம் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளரே நம்மை சுற்றுலா அனுப்பி வைத்தால்? உண்மைதான்.
AO இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூத்த பங்குதாரர் மார்க் நீல்சன். 35 வயதான மார்க்கை பொதுவாக உலகின் மிகச்சிறந்த பாஸ் என மக்கள் குறிப்பிடுவது உண்டு. அதற்கு காரணம் அவர் தனது ஊழியர்களுக்கு கொடுக்கும் வசதிகள் தான். மார்க் தனது ஊழியர்களை வெளிநாடுகளுக்கு சொகுசு சுற்றுலா அனுப்புவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். ஐஸ்லாந்து, மெக்சிக்கோ என பல நாடுகளுக்கு லட்ச கணக்கில் பணத்தை செலவழித்து ஊழியர்களை சுற்றுலாவுக்கு அனுப்பி வருகிறார் மார்க்.
இதுவரையில் தனது ஊழியர்களை சுற்றுலாவுக்கு அனுப்ப மட்டுமே 400,000 பவுண்டுகள் (ரூ 3.96 கோடி) வரை செலவு செய்திருக்கிறார் மார்க். இவரது ஊழியர்கள் ஐஸ்லாந்துக்கு சுற்றுலா செல்ல 82,000 பவுண்டுகள் (ரூ 81.22 லட்சம்) தொகையை வழங்கி இருந்தார் மார்க். இவை தவிர்த்து ஊழியர்களுக்கு போனஸ் தொகையும் வழங்கப்படுகிறது.
மார்க் கடந்த ஆண்டு தனது ஊழியர்களுக்கு கொடுத்த போனஸ் தொகை மட்டும் 62,000 பவுண்டுகள் (ரூ. 61.39 லட்சம்) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் ஊடகத்திடம் பேசுகையில்,"நான் எனது ஊழியர்களுக்கு கைம்மாறு செய்ய விரும்புகிறேன். அவர்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஊழியர்கள் 10 வருடங்களுக்கும் மேலாக என்னுடன் பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன். இது பணம் குறித்த விஷயம் மட்டுமல்ல. இது அவர்களது தன்னம்பிக்கை மற்றும் வளர்ச்சியை ஏற்படுத்தும் விஷயம். எனக்கு பிடித்த விஷயம் எது என்றால், இதுவரை வாய்ப்பு கிடைக்காத அல்லது பணம் சம்பாதிக்க வாய்ப்பு இல்லாதவர்களை அழைத்துச் சென்று அதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குக் காட்டுவது. எனக்கும் அப்படி ஒருவர் கற்றுக்கொடுத்தார்" என்றார்.
தன்னுடைய 21 வயதில் இன்சூரன்ஸ் துறையில் கால் பதித்த மார்க், தற்போது வெற்றிகரமாக தொழிலதிபராக கருதப்படுகிறார். தன்னுடைய வெற்றிக்கு காரணம் தனது ஊழியர்கள் தான் என்கிறார் மார்க். இதனாலேயே, மார்க்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தன்னுடைய இள வயதில் வேலை கிடைக்க மிகுந்த சிரமப்பட்டதாகவும், அதன் பிறகு கடின உழைப்பால் இந்த இடத்தை அடைந்ததாகவும் மார்க் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். மேலும், தன்னைப்போல தனது ஊழியர்களும் சிரமப்பட கூடாது என தான் விருப்பபப்படுவதாகவும் கூறுகிறார் மார்க்.
மற்ற செய்திகள்