'வித்யாசமான மாஸ்க் போட்ருக்கார்னு நெனைச்சேன்.. டக்குனு திரும்பி பாத்தா..'.. பேருந்தில் சக பயணிகளை 'மிரளவைத்த' நபர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பிரிட்டனில் பேருந்தில் பயணிக்கும் போது பயணி ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிவதற்கு பதில் பயன்படுத்திய பொருள் சக பயணிகளை திகைப்பூட்ட வைத்துள்ளது.

'வித்யாசமான மாஸ்க் போட்ருக்கார்னு நெனைச்சேன்.. டக்குனு திரும்பி பாத்தா..'.. பேருந்தில் சக பயணிகளை 'மிரளவைத்த' நபர்!

ஆனால் மாஸ்குக்கு பதிலாக அவர் அணிந்திருந்தது உண்மையில் பொருள் அல்ல. அது ஒரு உயிரினம். ஆம் பாம்பு ஒன்றை கழுத்தில் அணிந்து கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டிருந்த அந்த பயணி மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதியை கேலி செய்யும் விதமாக, பாம்பினை அணிந்து இருந்தது தெரியவந்தது.

Manchester Man wears snake as a face mask on bus goes viral

இந்த காட்சியை நேரில் கண்ட 46 வயது சக பெண் பயணி ஒருவர் கூறும்போது முதலில் அவர் ஒரு வேடிக்கையான மாஸ்க் அணிந்திருந்ததாக, தான் நினைத்ததாகவும் சற்று அவர் கழுத்தில் இருந்து இறங்கி கைப்பிடியில் ஊர்ந்து சென்ற போதுதான் அவர் அணிந்திருந்தது பாம்பு என்பதையே உறுதி செய்ததாகவும் அதை கண்டதும் திகைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்