"வெளிய போன்னு" கேட்ட சத்தம்?.. ஆவி இருப்பதாக தேடிய இடத்தில் பதிவான ஆடியோ?.. திகிலூட்டும் பின்னணி!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அவ்வப்போது ஏதாவது அமானுஷ்ய சம்பவம் நடந்தது தொடர்பான தகவல் இணையத்தில் அதிகம் வைரலாகி, இரு தரப்பிலான கருத்துக்களையும் அதிகம் பெறுவதை நாம் கவனித்திருப்போம்.

"வெளிய போன்னு" கேட்ட சத்தம்?.. ஆவி இருப்பதாக தேடிய இடத்தில் பதிவான ஆடியோ?.. திகிலூட்டும் பின்னணி!!

அப்படி ஒரு சூழலில் தற்போது ஒரு நபருக்கு நடந்த திகில் அனுபவம் என இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வரும் செய்தி ஒன்று பெரிய அளவில் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

அமானுஷ்ய விஷயத்தில் அதிகம் வல்லுனராக இருக்கும் Andy Pollard என்ற நபர் யார்க்ஷையர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் லீட்ஸில் உள்ள Kirkstall Abbey என்னும் பழங்கால துறவிகள் மடம் ஒன்றிற்கு சமீபத்தில் சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

அமானுஷ்ய அனுபவங்களை பெற செல்லும் Andy, ஆவிகளை கண்டறியும் கருவி உள்ளிட்டவற்றுடன் செல்வார் என தெரிகிறது. இதற்காக கேமரா, ஆடியோ ரெகார்ட் செய்யும் கருவி உள்ளிட்டவற்றுடன் அந்த மடத்திற்கும் அவர் சென்றுள்ளார். அப்படி ஒரு சூழலில் மதிய வேளையில் ஆவிகள் நடமாட்டத்தை உணரும் கருவிகளுடன் அந்த மடத்தில் Andy உலாவிக் கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது. அப்போது அங்கே அதிக பயன்பாட்டில் இல்லாத சிற்றாலயம் ஒன்றிற்குள்ளும் Andy நுழைந்ததாக தெரிகிறது.

அந்த சமயத்தில் ஆவிகளை கண்டுபிடிக்கும் கருவிகள் ஆவிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை உணர்த்தியதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இந்த சம்பவம் முழுவதையும் பதிவு செய்து கொண்டு வந்த Andy, வெளியே வந்து அவற்றை கவனித்த பிறகு தான் கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.

Man who hunt with ghosts audio recorder reportedly

அதாவது அவர் அந்த இடத்தில் பதிவு செய்த ஆடியோ ஒன்றில் யாரோ, "வெளியே போ" என சத்தம் போடுவது பதிவாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதன் காரணமாக இன்னொரு முறையும் அந்த கட்டிடத்தை சென்று ஆராய வேண்டும் என்றும் Andy முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் சென்ற கட்டிடம் 1070 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1152 முதல் 1548 ஆம் ஆண்டு துறவிகள் மடமாக பயன்படுத்து வந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

Man who hunt with ghosts audio recorder reportedly

அப்படி ஒரு சூழலில் தற்போது அமானுஷ்ய அனுபவத்திற்காக அங்கே சென்ற Andy Pollard என்பவருக்கு கிடைத்த திகைப்பூட்டும் அனுபவம் இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது. ஒரு பக்கம் இது திகிலூட்டும் விஷயமாக பார்க்கப்பட்டாலும் மற்ற சிலர் வேறு ஏதாவது காரணங்களாக இருக்கலாம் என்று கூட தங்களின் எதிர் கருத்துக்களை குறிப்பிட்டும் வருகின்றனர்.

SPIRITUAL

மற்ற செய்திகள்