'மீனோட' வெலை 23 கோடி..ஆனாலும் 'கடலுக்குள்ள' விட்ட மனுஷன்..ஏன்?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரூபாய் 23 கோடி மதிப்புள்ள மீனைப்பிடித்து அதனை மீண்டும் கடலுக்குள் விட்ட சம்பவம் செம வைரலாகி வருகிறது.

'மீனோட' வெலை 23 கோடி..ஆனாலும் 'கடலுக்குள்ள' விட்ட மனுஷன்..ஏன்?

சில நாட்களுக்கு முன் அயர்லாந்தில் உள்ள வெஸ்ட் கார்க் சாட்டர்ஸ் என்ற அமைப்பை சேர்ந்த டேவ் எட்வர்ட்ஸ் என்னும் மனிதர் 8.5 அடி நீளம் கொண்ட அசுர டுனா மீன் ஒன்றைப் பிடித்திருக்கிறார்.கேட்ச் அண்ட் ரிலீஸ் என்ற திட்டத்தின் கீழ் டேவ் இந்த மீனைப் பிடித்ததால் அதுகுறித்த தகவல்களை குறித்துக்கொண்டு மீண்டும் அந்த மீனை கடலில் விட்டுள்ளனர்.

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் இதுபோல மீன்களை பிடித்து அதனை மீண்டும் கடலுக்குள் விடும் குழுக்கள் இயங்கி வருகின்றன.வியாபார நோக்கில் பிடிக்கவில்லை என்பதால் சுமார் 270 கிலோ எடைகொண்ட இந்த மீன் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐரிஷ் நீரில் பிடிபட்ட மிகப்பெரிய மீனான இது இந்திய மதிப்பில் சுமார் 23 கோடி ரூபாய் என்பதால்,இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.

FISH, SEA