Naane Varuven M Logo Top

உலகத்தின் மோசமான கழிவறையை தேடிய மனுஷன்.. 91 நாடுகள் பயணம்.. ஆத்தாடி இதானா அது..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

 பிரிட்டனை சேர்ந்த ஒருவர் உலகின் மிகவும் மோசமான பொது கழிப்பிறையை தேடி இறுதியில் அதனை கண்டுபிடித்திருக்கிறார். இந்த பயணம் குறித்து புத்தகம் ஒன்றையும் அவர் எழுதியிருக்கிறாராம்.

உலகத்தின் மோசமான கழிவறையை தேடிய மனுஷன்.. 91 நாடுகள் பயணம்.. ஆத்தாடி இதானா அது..!

பயணம்

பிரிட்டனை சேர்ந்தவர் கிரஹாம் அஸ்கி (Graham Askey). 58 வயதான இவர் blog ஒன்றை நடத்தி வருகிறார். உலகத்தின் மிகவும் மோசமான கழிவறையை கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன் இவர் தனது பயணத்தை துவங்கியிருக்கிறார். இதற்காக அவர் 91 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஏராளமான மலைப்பிரதேசங்கள், குக்கிராமங்கள், அசாதாரண வானிலை கொண்ட இடங்கள் என இவருடைய நெடும்பயணம் தொடர்ந்திருக்கிறது. இறுதியில் உலகின் மிகவும் மோசமான கழிவறையையும் அவர் கண்டுபிடித்திருக்கிறார்.

புத்தகம்

இந்த பயணத்திற்காக கிரஹாம் அஸ்கி 150,000 பவுண்ட்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1.3 கோடி ரூபாய்) செலவழித்திருக்கிறார். மோசமான கழிவறையை தேடும் படலத்தில் தனக்கு கிடைத்த அனுபவங்களை கொண்டு இவர் புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். அதில், தான் சந்தித்த வினோதமான கழிப்பறைகள் அனுபவம் பற்றி குறிப்பிட்டுள்ளார் கிரஹாம் அஸ்கி. இந்த புத்தகத்திற்கு 'டாய்லெட்ஸ் ஆஃப் தி வைல்ட் ஃபிரான்டியர்' எனவும் பெயரிட்டிருக்கிறார் அவர்.

இதுபற்றி அவர் பேசுகையில்,"நான் ஒருமுறை மொராக்கோவுக்கு சென்றபோது அங்கிருந்த கழிப்பறை கட்டுமானத்தின் மோசமான தன்மை என்னை ஈர்த்தது. அதனை தொடர்ந்து, விடுமுறை நாட்களில் உலகின் மோசமான கழிப்பறை எது என்பதை தேட நினைத்தேன். இந்த அனுபவத்தை டாய்லெட்ஸ் ஆஃப் தி வைல்ட் ஃபிரான்டியர் என்ற புத்தகமாக எழுதியிருக்கிறேன்" என்கிறார்.

Man travels to 91 countries search world worst public toilet

உலகின் மோசமான கழிப்பறை

அதன்படி, தஜிகிஸ்தானின் அய்னி பகுதியில், பாமிர்ஸின் மேற்கு விளிம்பில் உலகின் மோசமான கழிப்பறை அமைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார் கிரஹாம் அஸ்கி. இதுபற்றி அவர் பேசுகையில்,"அதுதான் உலகத்தின் மோசமான கழிப்பறை. அதனை நரகத்தின் துளை என்று குறிப்பிட்டால் சரியாக இருக்கும். அதுபற்றி வார்த்தைகளில் விவரிக்கவே முடியாது. கழிப்பறையை சுற்றி துணிகள் மட்டுமே இருக்கிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால் அதையே கழிப்பறை காகிதமாகவும் மக்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அதனை சுற்றி கொடிய பாம்புகளும் இருக்கின்றன. மக்கள் அதனை முழுமையாக பயன்படுத்தியது போல தெரிகிறது" என்றார்.

WORST TOILET, BRITISH MAN, SEARCH

மற்ற செய்திகள்