"சம்பளம் ₹1.03 கோடி.. ஆனா வேலையே கொடுக்க மாட்டேங்குறாங்க".. கோர்ட்டுக்கு போன ஊழியர்.. யாரு சாமி இவரு..?
முகப்பு > செய்திகள் > உலகம்அயர்லாந்து நாட்டில் தனக்கு தகுந்த வேலை கொடுக்கப்படவில்லை என தான் பணிபுரிந்து வரும் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஊழியர் ஒருவர். இந்த வழக்கு பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.
Also Read | கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதா?.. சீன ஆய்வக விஞ்ஞானி சொல்லிய பதற வைக்கும் தகவல்..!
பொதுவாக வேலை செய்யும் இடங்களில் ஆரோக்கியமான பணிச் சூழலில் இருக்க வேண்டும் என பலரும் விரும்புவது உண்டு. வேலை பளுவும் அதிகப்படியான நேரம் பணி செய்தல் அதன் காரணமாக வரும் மன உளைச்சல் என பல ஊழியர்கள் பேசி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த டர்மோட் அலாஸ்டர் மில்ஸ் என்பவருக்கு வித்தியாசமான பிரச்சனை வந்திருக்கிறது. இந்த சிக்கல் நீதிமன்றம் வரையிலும் தற்போது சென்றிருக்கிறது. அப்படி என்னதான் அவருக்கு பிரச்சனை?
அயர்லாந்தின் டப்ளின் பகுதியைச் சேர்ந்தவர் மில்ஸ். இவர் ஐரிஷ் ரயில் நிறுவனத்தில் நிதித்துறை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆண்டுக்கு ஒரு கோடியே மூன்று லட்ச ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தனது நிறுவனத்தின் மீது தற்போது வழக்கு தொடர்ந்திருக்கிறார் மில்ஸ். இது குறித்து அவர் பேசுகையில் "தினந்தோறும் அலுவலகத்தில் என்னுடைய அறைக்குச் சென்று கணினியை ஆன் செய்து மின்னஞ்சல்களை பார்ப்பேன். ஆனால் எனக்கென எந்த மின்னஞ்சலும் வந்திருக்காது. என்னுடன் பணியாற்றுபவர்கள் கூட எனக்கென எந்த மின்னஞ்சலையும் அனுப்புவதில்லை. பெரும்பாலும் அலுவலகத்தில் செய்தித் தாள்களை படிப்பது, சாண்ட்விச் சாப்பிடுவது, வாக்கிங் செல்வது இதைத்தான் மீண்டும் மீண்டும் செய்து வருகிறேன்" என தெரிவித்திருக்கிறார்.
கடந்த 9 ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மில்ஸ் தற்போது வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அலுவலகத்திற்கு சென்று வருகிறார். அதிலும் தான் பெரிதாக எந்த வேலையையும் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் அவருடைய புகாருக்கான காரணம். மேலும், கடந்த 2014 ஆம் ஆண்டு தனது கம்பெனியில் நடைபெற்ற நிதி மோசடி குறித்து தான் அம்பலப்படுத்தியதாகவும் அதிலிருந்து என்னை மூத்த பணியாளர்கள் ஓரங்கட்டி வருவதாகவும் குற்றஞ்சாட்டி இருக்கிறார் மில்ஸ்.
இதன் காரணமாக தன்னுடைய திறமைகள் மட்டுப்படுத்தப்படுவதாகவும், எந்தவித பதவி உயர்வும் தனக்கு கிடைக்கவில்லை எனவும் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து அயர்லாந்தில் உள்ள தொழிலாளர்களுக்கான ஆணையத்தில் மில்ஸ் வழக்கு தொடர அங்கே இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
மற்ற செய்திகள்