அப்பாவுக்கு லாட்டரியில் அடிச்ச ஜாக்பாட்.. "அதோட குடும்பமே இரண்டா பிரிஞ்சிடுச்சு".. அதிர்ச்சியை உண்டு பண்ணிய பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்துபாய், இங்கிலாந்து, கனடா என உலக அளவில் பல இடங்களில், லாட்டரி விற்பனை என்பது சட்ட பூர்வமாக இருந்து வருகிறது.
Also Read | "பாக்க பாம்பு மாதிரியே இருந்துச்சு, ஆனா".. மர்ம உயிரினத்தை பார்த்து உறைந்து போன நெட்டிசன்கள்
இப்படி பல உலக நாடுகளில் லாட்டரி விற்பனை மிகவும் பரவலாக இருந்து வரும் நிலையில், ஏராளமானோரின் வாழ்க்கை இந்த லாட்டரியில் கிடைக்கும் பரிசுத் தொகை மூலம் மாறுவதை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருக்கும் நபர்கள், அடிக்கடி லாட்டரி வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்பதுடன், அதன் மூலம் தங்களின் வாழ்க்கை மாறி விடும் என்ற நம்பிக்கையில் ஏதாவது முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.
அப்படி இருக்கும் போது, ஒரு அதிர்ஷ்டம் கைகூடி, லாட்டரியில் கிடைக்கும் பணம் அவர்களின் வாழ்க்கையையே தலை கீழாக திருப்பி போடும். அப்படி இருக்கையில், இங்கிலாந்தின் Northamptonshire என்னும் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு லாட்டரியில் மிகப் பெரிய பரிசுத் தொகை கிடைத்திருந்த நிலையில், இதன் காரணமாக அவரது குடும்பமே பிரிந்த சம்பவம், அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பேருந்து ஓட்டுநராக இருந்த அலெக்ஸ் ராபர்ட்சன் என்பவருக்கு 38 மில்லியன் டாலர்கள் பரிசு கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தன்னுடன் சேர்த்து வேலை பார்க்கும் சக ஊழியர்கள் என மொத்தம் 12 பேர், இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், கிடைத்த பரிசுத் தொகையை ஆளுக்கு 3.1 மில்லியன் பவுண்டுகள் வீதம் பிரித்துள்ளனர்.
இந்நிலையில் தான், அலெக்ஸ் ராபர்ட்சனின் இரண்டு மகன்களான அலெக்ஸ் ஜுனியர் மற்றும் வில்லியம் ஆகியோர் காரணமாக பிரச்சனை உருவானது. ஏனென்றால், தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை மகன்கள் இருவருக்கும் அலெக்ஸ் ராபர்ட்சன் பிரித்துக் கொடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது. மாறாக அவர்களுக்கு 200 சிகரெட்டுகளை மட்டுமே கொடுத்துள்ளார்.
இதனால், தந்தைக்கும் மகன்களுக்கும் இடையே வாக்குவாதம் உருவானதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், மகன் வில்லியம் மீது மிரட்டல் மெசேஜ்களை அனுப்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், தந்தை தங்களுக்கு ஒரு பவுண்டு கூட தராமல் ஏமாற்றியதால் காரணமாக கோபமடைந்த மகன்கள் இருவரும் அலெக்ஸ் ராபர்ட்சன் காரை உடைத்து சேதமாக்கி, போலீசில் சரண் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, வேறு நாட்டிற்கு அலெக்ஸ் சுற்றுலா சென்றிருந்து நீண்ட நாட்களாக திரும்பாததால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஒரு லாட்டரி ஜெயித்ததன் காரணமாக, ஒன்றாக இருந்த குடும்பங்கள் தற்போது பிரிந்து போய் இருக்கும் சம்பவம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | உலக பணக்காரர்கள் பட்டியல்.. எந்த இந்தியரும் தொடாத இடத்தில் கவுதம் அதானி.. மிரள வைத்த தொழிலதிபர்!!
மற்ற செய்திகள்