"உயரத்தை பார்த்து பயப்படுவதை போக்க நெனெச்சேன்"..ஒருநாள்ல அதிகமுறை Bungee Jumping செய்த நபர்..எண்ணிக்கையை கேட்டு கிறுகிறுத்துப்போன நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒரே நாளில் அதிகமுறை Bungee Jumping செய்து உலக சாதனை படைத்துள்ளார். இதனால் அவருக்கு கின்னஸ் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
Also Read | மனைவி வீட்டுல இல்ல..தோட்டத்துல கேட்ட வினோத சத்தம்.. கணவன் செஞ்ச பகீர் காரியத்தால் பதறிப்போன போலீஸ்..!
பெரும்பாலான மக்களுக்கு உயரம் என்றால் கொஞ்சம் பயம் தான். சிலருக்கு உயரமான மாடிப்படிகளில் ஏறுவதே சவாலான காரியமாக தோன்றும். ஆனால், இன்னும் சிலர் இமயமலையையே சாதாரணமாக ஏறி சாதனை படைக்கிறார்கள். அதிலும் Bungee Jumping செய்ய உலகம் முழுவதிலும் ஏராளமான சாகச பிரியர்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபிராங்கோயிஸ்-மேரி டிபன்.
உலக சாதனை
தற்போது 44 வயதான ஃபிராங்கோயிஸ்-மேரி டிபன், பெர்த்ஷைரில் உள்ள கேரி பாலத்தில் இருந்து 765 முறை Bungee Jumping செய்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதுவும் 24 மணிநேரத்திற்குள். நேற்று காலை 10 மணிக்கு துவங்கி இன்று காலை 10 மணிவரையில் தொடர்ந்து 765 முறை Bungee Jumping செய்திருக்கிறார் டிபன்.
இதற்காக பல வருடங்கள் பயிற்சி எடுத்ததாக கூறும் இவர், தனது 15 பேர்கொண்ட குழுவுடன் இணைந்து செயல்பட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
முந்தைய சாதனை
இதற்கு முன்னர், 2017 ஆம் ஆண்டு ஆக்லண்ட் துறைமுக பாலத்திலிருந்து மைக் ஹியர்ட் என்பவர் 24 மணிநேரத்திற்குள் 430 முறை Bungee Jumping செய்ததே இதுவரையில் சாதனையாக இருந்துவந்தது. இந்நிலையில், இந்த சாதனையை தற்போது முறியடித்திருக்கிறார் டிபன். இவர் நேற்று இரவு 10.30 மணிக்கு தனது 431-வது Bungee Jumping மூலமாக முந்தைய சாதனையை முறியடித்ததாக கின்னஸ் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி பேசிய டிபன்,"எனக்கு உயரத்தை கண்டால் அச்சம் ஏற்படும். இதனை கடந்துசெல்ல நினைத்தேன். அதற்கு Bungee Jumping தான் சிறந்த வழி என்பதை சீக்கிரத்திலேயே உணர்ந்துகொண்டேன். இந்த சாதனைக்காக 5 வருடங்களாக முயற்சித்துவந்தேன். இறுதியில் இலக்கை அடைந்துவிட்டேன்" என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
11 வருடங்களுக்கு முன்பாக முதன்முறை Bungee Jumping செய்த டிபன், அதன்மீது இருந்த ஆர்வம் காரணமாக தொடர்ந்து பயிற்சி எடுத்து இந்த சாதனையை படைத்திருப்பதாக அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Also Read | "இதைச் செய்யுங்க.. இல்லைன்னா வேலையைவிட்டு போய்டுங்க"..சீரியஸான எலான் மஸ்க்.. என்ன ஆச்சு?
மற்ற செய்திகள்