'கொரோனாவா'ல் பாதிக்கப்பட்ட செவிலியர்... 'சிகிச்சை' முடிந்து... தன்னுடைய உடம்பை பார்த்து 'கதறியழுத' சோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கலிஃபோர்னியாவை சேர்ந்த மைக் என்பவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

'கொரோனாவா'ல் பாதிக்கப்பட்ட செவிலியர்... 'சிகிச்சை' முடிந்து... தன்னுடைய உடம்பை பார்த்து 'கதறியழுத' சோகம்!

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில், தற்போது கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தற்போதுள்ள மற்றொரு புகைப்படத்தையும் எடுத்து இரண்டையும் இணைத்து தனது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். முன்னதாக கொரோனா மூலம் பாதிக்கப்படும் முன் 86 கிலோ உடல் எடையுடன் இருந்த மைக், கொரோனாவின் காரணமாக சுமார் 20 கிலோ எடை வரை குறைந்துள்ளார்.

'வெண்டிலேட்டரில் ஆறு வாரங்களுக்கு மேல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை காட்டவே இதை புகைப்படத்தை பதிவிட்டேன். கொரோனா நோய் என் நுரையீரலின் திறனைக் குறைத்துள்ளது. என்னையே என்னால் அடையாளம் காண முடியவில்லை. கண்ணாடிகளை பார்க்கும் போது என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. நிறைய அழுதுவிட்டேன்' என கூறியுள்ளார்.

முன்னதாக மைக்கிற்கு கொரோனா உறுதியானதும் அவரை நான்கு வாரங்கள் வெண்டிலேட்டரில் வைத்த பின்னரே அவரால் இயல்பாக மூச்சு விட முடிந்தது. கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என அவர் பகிர்ந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்