'பல்டி அடித்து உருண்ட கார்'... '23 மணிநேர ஆபரேஷன்'... 'இனிமேல் இந்த முகத்தை கண்ணாடியில பாக்க முடியாதா'?
முகப்பு > செய்திகள் > உலகம்நியூ ஜெர்சி பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞரான ஜோ டிமியோ என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம், இரவு ஷிப்ட் முடித்து விட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது ஜோ காரை ஓட்டிக் கொண்டிருந்த போது திடீரென அசந்து தூங்கியுள்ளார்.
இதனால், அவர் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், அது பயங்கரமாக வெடித்துள்ளது. இதில், காரில் இருந்த ஜோவின் உடலில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வழியே சென்ற நபர்களால் ஜோ பத்திரமாக மீட்கப்பட்ட போதும் அவரது விரல்கள், உதடு, கண் இமைகள் ஆகியவை தீ காயத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது பார்வைத்திறன் இழக்கப்பட்டு, அவரது சாதாரண வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பல மாதங்கள் மருத்துவமனையில் கோமாவில் இருந்து வந்த ஜோ, அதன் பிறகும் சில மாதங்கள், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு முகம் மற்றும் இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உலகிலேயே இவருக்கு தான் முதல் முதலாக கை மற்றும் முக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தனது வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்ததாக ஜோ தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 23 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட மொத்தம் 140 பேர் கலந்து கொண்டு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். தற்போது, விபத்தில் இருந்து முழுவதுமாக ஜோ மீண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்