"ஸ்லோவா வந்து சேருறதுக்கும் ஒரு நேரம், காலம் வேணாமா?"... 27 வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்த லெட்டர்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

நம்மை சுற்றி நடக்கும் பல்வேறு விஷயங்களை நாம் சமூக வலைத்தளங்கள் மூலமாக தெரிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் நாள்தோறும் பல்வேறு வைரலான செய்திகள் கூட பெரிய அளவில் நமது கவனத்தை பெறும்.

"ஸ்லோவா வந்து சேருறதுக்கும் ஒரு நேரம், காலம் வேணாமா?"... 27 வருஷம் கழிச்சு வீட்டுக்கு வந்த லெட்டர்!!

                     Images are subject to © copyright to their respective owners.

Also Read | "செருப்பு மட்டும் தான் டார்கெட்".. Flat ஏறி திருடும் கும்பல்.. சிசிடிவியில் சிக்கிய உண்மை.. திடுக்கிடும் பின்னணி!!

வழக்கமாக நடைபெறும் விஷயத்தில் இருந்து சற்று மாறுபட்டு வினோதமாகவோ அல்லது அதிர்ச்சி கலந்தோ இருக்கும் சமயத்தில் அது தொடர்பான செய்திகள் பெரிய அளவில் நெட்டிசன்கள் கவனத்தை பெறும். அப்படி ஒரு சம்பவம் குறித்த செய்திதான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் நாம் உலகின் எந்த மூலையில் இருக்கும் நபரிடம் பேசவோ அல்லது அவர்களுடன் தொடர்பில் இருக்கவோ செல்போன் உள்ளிட்ட பல கருவிகளை பயன்படுத்துகிறோம்.

ஆனால், பல ஆண்டுகள் முன்பு டெலிபோன் உள்ளிட்ட கருவிகளின் பயன்பாடு குறைவாக இருந்த காலங்களில் கடிதங்கள் மூலமாக தான் ஒருவருக்கொருவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு உரையாடவும் செய்தனர். இன்றைய காலகட்டத்தில், கடிதம் எழுதுவது மற்ற தொழில்நுட்ப பொருள்களின் காரணமாக சற்று குறைந்திருந்தாலும் இன்னும் சிலர் கடிதம் எழுதுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

Man received letter which written before 27 years

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில் தான் கடந்த 1995 ஆம் ஆண்டு எழுதிய கடிதம் ஒன்று சுமார் 28 ஆண்டுகள் கழித்து நபர் ஒருவர் கைக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த சம்பவம் UK-வின் Northumberland என்னும் பகுதியில் நடைபெற்றுள்ளது. அங்கே வசித்து வரும் சுமார் 60 வயதாகும் ஜான் ரெயின்போ என்பவருக்கு இந்த கடிதம் சென்று சேர்ந்த நிலையில், அவர் தற்போது தங்கியுள்ள வீட்டில் இதற்கு முன்பு குடியிருந்த நபர் ஒருவருக்கு எழுதப்பட்ட கடிதம் என்பதும் தெரிய வந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜான் ரெய்ன்போ அந்த வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அந்த கடிதத்தை முதலில் சாதாரண கடிதமாக தான் ஜான் கருதி இருந்தார். பின்னர் படித்து பார்த்தபோதுதான் அது ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய கடிதம் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய நபரின் குழந்தை கால பருவத்தில் உள்ள பல்வேறு விஷயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இதனைக் கண்டு ஒரு நிமிடம் ஆடியும் போயுள்ளார் ஜான் ரெயின்போ.

மேலும் அந்த வீட்டில் இதற்கு முன்பு வசித்த நபருடன் ஜான் தொடர்பில் இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது.

Also Read | குழந்தைக்கு பெயர் தேடிய போது.. கணவர் பற்றி தெரிய வந்த அதிர்ச்சி கலந்த உண்மை!!.. "இது தெரியாம கல்யாணமும் நடந்துடுச்சே"

MAN

மற்ற செய்திகள்