Naane Varuven M Logo Top

ராணிக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் நின்ற நபர்.. திடீர்ன்னு செய்ய நெனச்ச காரியம்.. அருகே நின்றவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் ராஜ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அரச குடும்பத்தை சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டு ராணிக்கு பிரியாவிடை அளித்தனர்.

ராணிக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் நின்ற நபர்.. திடீர்ன்னு செய்ய நெனச்ச காரியம்.. அருகே நின்றவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!!

Also Read | இதுவரை யாரும் கண்டிராத ராணி எலிசபெத் புகைப்படம்.. பக்கிங்காம் அரண்மனை வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவு!!

கடந்த 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த ராணி எலிசபெத், செப்டம்பர் 8 ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, இத்தனை நாட்கள் அரசு மரியாதை படி, ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், ராணியின் உடலுக்கு உலக தலைவர்கள் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இறுதியாக விண்ட்சருக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் அங்கே நல்லடக்கம் செய்யப்பட்டது.

விண்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரச வழக்கப்படி அவருடைய கணவரின் கல்லறை அருகே எலிசபெத்தின் சவப்பெட்டி புதைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மிக மூத்த அதிகாரியான லார்ட் சேம்பர்லெய்ன், அரச குடும்பத்தினர் அலுவலகத்தின் மந்திரக்கோல் என்று அழைக்கப்படும் ஒரு தடியை உடைத்து ராணியின் சவப்பெட்டி மீது வைத்தார். ராணியின் வாழ்க்கை பயணம் முடிவுக்கு வந்ததை வெளிப்படுத்தும் விதமாக இந்த சடங்கு மேற்கொள்ளப்படுகிறது.

Man queueing to see queen elizabeth create offence

இந்நிலையில், ராணி எலிசபெத் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்த சமயத்தில், வரிசையில் நின்ற ஒருவர் செய்ய முயன்ற விஷயமும், அதன் பின்னர் நடந்த சம்பவமும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணி எலிசபெத் உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த சமயத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் அஞ்சலியை செலுத்தி இருந்தனர். அப்போது, வரிசையில் நின்ற நபர் ஒருவர், திடீரென யாரும் எதிர்பாராத காரியம் ஒன்றில் ஈடுபட முயன்றுள்ளார். வரிசையில் நின்ற Mark Hague என்ற நபர், ராணியை சவப்பெட்டிக்குள் இருந்து எழுந்து வரும்படி அவரிடமே சொல்ல போகிறேன் என்றும் அவர் இறக்கவே இல்லை என்றும் கூறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Man queueing to see queen elizabeth create offence

இதனை அவர் அருகில் இருந்து கேட்ட நபர் ஒருவர், இவர் ராணி உடல் அருகே சென்றால் பிரச்சனை நிகழும் என கருதி உடனடியாக அங்கிருந்த போலீசாரை அழைத்து விவரத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அங்கு வந்த போலீசாரிடமும் மார்க் பிரச்சனையில் ஈடுபட்டதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அவரை வரிசையில் இருந்து அகற்றவும் செய்துள்ளனர். இதன் பின்னர், மார்க்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவத்தால் வரிசையில் இருந்தவர்கள் மத்தியில் சில மணி நேரம் பரபரப்பும் நிலவி இருந்தது.

Also Read | ராணி எலிசபெத்-க்கு அஞ்சலி செலுத்த காத்திருந்த இருவர்.. 14 மணி நேரத்துல லவ்வர்ஸ் ஆகிட்டாங்களா..? ஒரே நாளில் வைரல் ஆன டாப்பிக்

QUEEN ELIZABETH, QUEEN ELIZABETH FUNERAL, ராணி எலிசபெத்

மற்ற செய்திகள்