‘இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட நெனக்கவே இல்ல’!.. முகத்தில் ஒட்டிக்கொண்ட பிளாஸ்டிக் கப்.. சேலஞ்ச் விட்டு விபரீதத்தில் சிக்கிய நபர்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரில்லா க்ளு சேலஞ்ச் செய்த நபரின் முகத்தில் பிளாஸ்டிக் கப் ஒட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘இப்படி நடக்கும்னு கொஞ்சம் கூட நெனக்கவே இல்ல’!.. முகத்தில் ஒட்டிக்கொண்ட பிளாஸ்டிக் கப்.. சேலஞ்ச் விட்டு விபரீதத்தில் சிக்கிய நபர்..!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் லென் மார்ட்டின் (Len Martin). இவர் கொரில்லா பசை சேலஞ்ச் (Gorilla Glue challenge) செய்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்காக கொரில்லா நிறுவனத்தின் பசையை ஒரு பிளாஸ்டிக் கப்பின் உட்பகுதியில் தடவி, அதனை தனது வாயில் வைத்துள்ளார். லான் மார்ட்டினின் இந்த விபரீத முயற்சி, கடைசியில் அவருக்கு வினையாக முடிந்தது.

Man puts Gorilla Glue in his mouth to prove that it is easy to remove

பசையுடன் இருந்த அந்த பிளாஸ்டிக் கப் அவரது முகத்தில் அப்படியே ஒட்டிக்கொண்டது. அதை எடுக்க முயன்று முடியாததால், உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சம்பவங்களை மருத்துவர்களிடம் கூறி பிளாஸ்டிக் கப்பை எடுக்க கூறியுள்ளார். இதனை அடுத்து லென் மார்டினுக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த கப்பை மருத்துவர்கள் எடுத்துள்ளனர்.

Man puts Gorilla Glue in his mouth to prove that it is easy to remove

சமீபத்தில் டெஸ்ஸிகா பிரௌன் (Tessica Brown) என்ற பெண் கொரில்லா நிறுவனத்தின் ஹேர் ஸ்பிரே ஒன்றை வாங்கி தனது தலைமுடியில் தடவியுள்ளார். இதன்பின்னர் அவரது தலைமுடி அப்படியே ஒன்றுடன் ஒன்று ஒட்டியுள்ளது. சுமார் 15 நிமிடமாக அவர் தண்ணீரில் முடியை நனைத்தும் அதை பிரிக்க முடியவில்லை.

Man puts Gorilla Glue in his mouth to prove that it is easy to remove

இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்ற அவர் தலைமுடியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

Man puts Gorilla Glue in his mouth to prove that it is easy to remove

இந்த நிலையில் டெஸ்ஸிகா பிரௌன் கூறியது பொய் என நிரூபிக்க தான் கொரில்லா க்ளூ சேலஞ்ச் செய்ததாக லென் மார்டின் கூறியுள்ளார். ஆனால் இப்படியொரு விபரீதம் நடக்கும் என உண்மையில் நினைக்கவில்லை என்றும், யாரும் இதைபோல் முயற்சிக்க வேண்டாம் என்றும் லென் மார்டின் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்