ஆஹா.. வேறலெவல் ஐடியா இது.. தம்பி எப்ப ஜாய்ன் பண்றீங்க.. அசந்துபோய் கூப்பிட்டு வேலை கொடுத்த கம்பெனி..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இளைஞர் ஒருவர் தனது செயலால் நிறுவனத்தை ஆச்சரியப்படுத்தி மார்க்கெட்டிங் வேலையைப் பெற்றிருக்கிறார்

ஆஹா.. வேறலெவல் ஐடியா இது.. தம்பி எப்ப ஜாய்ன் பண்றீங்க.. அசந்துபோய் கூப்பிட்டு வேலை கொடுத்த கம்பெனி..!

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரிண்டிங் நிறுவனம் ஒன்று மார்கெட்டிங் பணிக்கு ஆட்சேர்க்கைக்காக அழைப்பு விடுத்திருந்தது. இந்த பணிக்கு பலரும் விண்ணப்பித்திருந்தனர். அதில் ஜோனத்தான் என்ற 24 வயது இளைஞரும் இந்த வித்தியாசமாக விண்ணப்பித்திருந்தார்.

அனைவரும் பின்பற்றும் வழக்கமான பாணியைப் பின்பற்றாமல், தன்னுடைய ரெஸ்யூமில் LinkedIn ப்ரொபைலை QR கோட் மூலமாக இணைத்து அதை பிரிண்ட் செய்துள்ளார். இதனை அடுத்து அவற்றை அந்த நிறுவனத்தின் கார் பார்க்கிங்கில் இருக்கும் எல்லா கார்களின் முகப்பு கண்ணாடியிலும் ஒவ்வொன்றாக வைத்து கவனத்தை ஈர்த்துள்ளார். இதன்பலன், தன்னையே திறமையாக மார்க்கெட்டிங் செய்து கொண்டவர் இந்தப் பணிக்கு சரியாக இருப்பார் என முடிவு செய்து அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கொடுத்துள்ளது.

Man put resume on cars in parking lot, gets hired

இதுகுறித்து தெரிவித்த அந்த நிறுவனத்தின் அதிகாரி, ‘ஜோனதன் எங்களுடைய கவனத்தை ஈர்த்துள்ளார். நிறுவனத்தை பற்றி தெரிந்து வைத்திருப்பவராகவும், கிரியேட்டிவிட்டியான ஆளாகவும், நகைச்சுவை உணர்வோடும் இருக்கிறார். அதனால்தான் எங்கள் அணிக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என்று முடிவு செய்தோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து இளைஞரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது. பலரும் இந்த ஐடியா சூப்பரா இருக்கே, நம்மளும் முயற்சி பண்ணி பார்த்திட வேண்டியதுதான் என குறும்பாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

JOBS, UK, RESUME, CAR

மற்ற செய்திகள்