"உனக்கு நான் இருக்கேன்.." சுத்தி எல்லாரும் அழுதுகிட்டே இருந்த எடத்துல.. பெண்ணிடம் காதலை சொன்ன 'இளைஞர்' நெகிழ்ச்சி வீடியோ

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக, நமக்கு நன்கு தெரிந்த ஒரு நபர் மீது காதல் தோன்றினாலோ, அல்லது அடிக்கடி நாம் பார்க்கும் ஒருவர் மீது நமக்கு விருப்பமாக இருந்தலோ, அந்த காதலை மிக மிக வித்தியாசமான முறையில் அவர்களிடம் சர்ப்ரைஸாக வெளிப்படுத்த வேண்டும் என நினைப்போம்.

"உனக்கு நான் இருக்கேன்.." சுத்தி எல்லாரும் அழுதுகிட்டே இருந்த எடத்துல.. பெண்ணிடம் காதலை சொன்ன 'இளைஞர்' நெகிழ்ச்சி வீடியோ

இப்படி சர்ப்ரைஸ் செய்யும் நபர்களின் ஐடியாக்களை ஒன்றிரண்டுக்குள் நாம் அடக்கி விட முடியாது. ஏனென்றால், மிக மிக கிரியேட்டிவிட்டியாக, நேரம், இடம் என அனைத்தும் தெரிந்து அந்த நபருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும்.

அப்படி ஒருவர் தனது காதலை வெளிப்படுத்தும் போது, சிலரால் நிச்சயம் அதனை மறுத்து முடியாது என்று கூட சொல்லி விட முடியாது. ஏனென்றால், அவரின் காதல் வெளிப்பாடு அந்த அளவுக்கு உணர்வுள்ளதாக இருக்கும். இதற்கு அவர் காதலை வெளிப்படுத்தும் இடமும் மிக முக்கியமான ஒன்றாகும்.

காதல் சொன்ன இடம்..

அந்த வகையில், இளைஞர் ஒருவர் தனக்கு பிடித்தமான பெண்ணிடம் காதலை வெளிப்படுத்த, அவர் தேர்வு செய்த இடம் ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், ஒருவரின் இறுதிச் சடங்கு அங்கு நடந்து வந்துள்ளது. அந்த நபரின் உடல் இருந்த சவப்பெட்டி அருகே, அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் உட்கார்ந்து அழுது கொண்டே இருக்கின்றனர்.

man proposes his girlfriend at her father funeral

காதலை வெளிப்படுத்திய இளைஞர்

மிகவும் சோகமான ஒரு சூழ்நிலையில் அந்த இடமே, அமைதியாக இருக்கிறது. அந்த நேரத்தில், இறந்தவரின் மகளும் அழுது கொண்டே இருந்துள்ளார். அப்போது அவர் அருகே சென்ற இளைஞர், அந்த பெண்ணிடமே தனது காதலை வெளிப்படுத்தி, மோதிரத்தை கையில் அணிவித்துள்ளார். இளைஞரின் செயலால், அங்கிருந்தவர்களும் ஒரு நிமிடம் அதிர்ந்து போயினர்.

நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ, நெட்டிசன்கள் மத்தியிலும் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக, மக்கள் பலரும் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். ஒரு பக்கம், அவர் இடத்தை அறிந்து காதலை வெளிப்படுத்தி இருக்கலாம் என்றும், அல்லது இறுதிச் சடங்கு அனைத்தும் முடிந்த பிறகாவது, தன்னுடைய காதலை சொல்லி இருக்கலாம் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

man proposes his girlfriend at her father funeral

இன்னொரு பக்கம், உயிரிழந்த நபர் இருக்கும் போதே தன்னுடைய காதலை வீட்டாரிடம் தெரிவித்து, பின்னர் அவரின் சம்மதத்துடன் அந்த பெண்ணை இளைஞர் திருமணம் செய்ய நினைத்திருக்கலாம் என்றும், அதற்கு முன்பே அவர் இறந்து போனதால், அந்த சமயத்தில், இளம்பெண்ணுக்கு உறுதுணையாக இருப்பேன் என்ற கோணத்தில் கூட, அவர் அப்படி காதலை வெளிப்படுத்தி இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

LOVE, PROPOSAL, VIRAL VIDEO, காதல்

மற்ற செய்திகள்