"இப்படியா லவ் Propose பண்றது?".. இளைஞரின் செயலால் அதிர்ந்த மைதானம்.. கடைசியில் அவரே வெச்ச ட்விஸ்ட்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அவ்வபோது சமூக வலைத்தளங்களில் நாம் நேரத்தை செலவிடும் போது நம்மை சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.

"இப்படியா லவ் Propose பண்றது?".. இளைஞரின் செயலால் அதிர்ந்த மைதானம்.. கடைசியில் அவரே வெச்ச ட்விஸ்ட்!!

அதிலும், பலரும் தங்களின் மனதுக்கு நெருக்கமான நபர்களிடம் காதலை வெளிப்படுத்துவது தொடர்பாக எக்கச்சக்க வீடியோக்கள் வைரல் ஆவதை நம்மில் பலரும் பார்த்திருப்போம்.

ஒரு நபர் காதலை வெளிப்படுத்தும் போது எதிரே உள்ள நபர் அதற்கு ஓகே சொல்லி விட்டால் அதை விட பெரிய ஆனந்தம் நிச்சயம் எதுவும் இருந்து விடாது. அப்படி நல்ல முடிவாக அது வந்து விட்டால் நிச்சயமாக அவர்கள் இருவரும் இணைந்து வாழும் சமயத்தில், அந்த தருணம் மிக மிக முக்கியம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படும்.

இதன் காரணமாக தான் காதலிக்கும் நபரிடம் Love Propose செய்யும் போது பல வித்தியாசமான வழிகளையும் ஏராளமானோர் பின்பற்றுவார்கள். சில நேரங்களில் கிரிக்கெட் மைதானம் அல்லது கால்பந்து மைதானம் உள்ளிட்ட இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நடுவே தங்களின் காதலை அவர்கள் வெளிப்படுத்தும் சமயத்தில் அது மிக மிக மெய்சிலிர்க்க வைக்கும் தருணமாகவும் இருக்கும். அந்த வகையில் ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தை அதிகம் கலக்கி வருகிறது.

Man proposes his girl friend after a drama in football ground

இது தொடர்பாக தற்போது வைரலாகும் வீடியோ ஒன்றில், கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது இரண்டு அணி வீரர்கள் Warm Up செய்து கொண்டிருக்கும் சமயத்தில் மைதானத்திற்குள் ரசிகர் ஒருவர் ஏறி குதித்து செல்கிறார். அந்த சமயத்தில் அவர் திடீரென கீழே விழ காலில் ஏதோ காயம் ஏற்பட்டது போல அவர் மைதானத்தில் துடிக்கவும் செய்கிறார்.

இதனைக் கண்டதும் அங்கே நிற்கும் சிலர் அவரை எழுப்பி என்ன ஆனது என்பதை அறிந்து கொள்ளவும் முயற்சிக்கின்றனர். அப்போது அவருடன் வந்த பெண் ஒருவரும் என்ன ஆனது என பார்ப்பதற்காக அந்த ரசிகரின் அருகே மைதானத்தில் வருகிறார். இதனால் சற்று பரபரப்பான சூழலும் அங்கே உருவாகும் நிலையில், யாரும் எதிர்பாராத மற்றொரு சம்பவம் அங்கே அரங்கேறுகிறது.

Man proposes his girl friend after a drama in football ground

அவருடன் வந்த பெண் அருகே வந்ததும் திடீரென எழுந்து முழங்காலிட்டு மோதிரத்தை கொடுத்து தனது காதலையும் அவர் வெளிப்படுத்தி இருந்தார். அவருக்கு ஏதோ காயம் ஏற்பட்டது என தெரிந்து அப்பகுதியில் இருந்தவர்களும் பதறிப் போக பின்பு தான் அது காதலை வெளிப்படுத்துவதற்கான நாடகம் என்பதும் தெரிய வந்துள்ளது.

 

மிக மிக வித்தியாசமாக வாலிபர் காதலை வெளிப்படுத்தியது தொடர்பாக இந்த வீடியோ இணையத்தை தற்போது கலக்கி வருவதுடன் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கிலும் இருந்து வருகிறது.

LOVE, PROPOSAL, FOOTBALL

மற்ற செய்திகள்