‘இது வேறலெவல் சர்ப்ரைஸ்’!.. வாயில் மறைத்து வைத்திருந்த கிப்ட்.. நடுவானில் இன்ப அதிர்ச்சி கொடுத்த இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்நடுவானில் ஸ்கைடைவிங் செய்துகொண்டே தோழியிடம் இளைஞர் ஒருவர் காதலை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தாங்கள் காதலிக்கும் நபரிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்த பலரும் பலவிதமாக முயற்சி செய்கின்றனர். அந்த வகையில் இளைஞர் ஒருவர் நடுவானில் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சாகச விளையாட்டு ஆர்வலரும், விமான பைலட்டுமான ரே (Ray) என்பவர் தனது தோழி கேட்டி (Katie) உடன் ஸ்கைடைவிங் (Skydiving) செய்துள்ளார்.
நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது தோழியிடம் காதலை வெளிப்படுத்த நினைத்த ரே, தனது வாயில் மறைத்து வைத்திருந்த மோதிரத்தை எடுத்து கேட்டியின் முன் காண்பித்து காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத கேட்டி, மகிழ்ச்சியில் ரேவின் காதலை அப்போதே ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதனை வீடியோ எடுத்த ரே, அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடுவானில் சர்ப்ரைஸ்ஸாக மோதிரத்தை கொடுத்து தோழியிடம் காதலை வெளிப்படுத்திய ரே-க்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்