சாப்பாடு விஷயத்துல வந்த சண்டை.. தண்ணி எடுத்து அண்ணன் முகத்தில் ஊற்றியதால் ஜெயிலுக்கு போன தம்பி.. பரபர பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக, அண்ணன் தம்பிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுவது என்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் அது ஒரு கட்டத்திற்கு மேல் சென்று அடிதடி வரை போகும் போது விபரீதமாக கூட ஏதாவது நிகழலாம். அப்படி ஒரு சம்பவம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லி கவுண்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் டேவிட் ஷெர்மன் பவெல்சன். இவருக்கு தற்போது 64 வயதாகிறது.
இவருக்கு ஒரு மூத்த சகோதரரும் உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீட்டில் இருந்த போது சாப்பாட்டு விஷயத்தில் தகராறு உருவானதாக கூறப்படுகிறது. வீட்டில் உணவு பொருள் ஒன்றை டேவிட்டின் அண்ணன் ஃப்ரிட்ஜில் வைத்தாக தகவல்கள் கூறுகின்றது. அதனை பிறகு சாப்பிடலாம் என அவர் நினைத்திருந்த சூழலில், அதனை மூத்த சகோதரருக்கு கொடுக்காமல் இளையவரான டேவிட் ஷெர்மன் முழுவதுமாக சாப்பிட்டு விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதன் பெயரில் அவரது மூத்த அண்ணன் இது பற்றி டேவிட்டிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட பின்னர் அது அவர்களுக்கு இடையே தகராறாகவும் மாறி உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்த தனது அண்ணன் மீது மேஜையில் இருந்த ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து ஊற்றியுள்ளார் டேவிட்.
Images are subject to © copyright to their respective owners.
தனது தம்பி முகத்தில் தண்ணீரை எடுத்து ஊற்றியதால் அடுத்து அவர் ஆக்ரோஷத்தில் ஏதாவது செய்யக் கூடும் என எண்ணிய சகோதரர், போலீசாருக்கும் போன் செய்து தன்னை தாக்கியதாக புகார் அளித்துள்ளார். அதன் பெயரில், டேவிட் ஷெர்மனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அங்கே உள்ள சட்ட விதிகளின் படி குடும்ப உறுப்பினர்கள் என அறிந்தே தாக்குதல் நடத்தினால் 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தகவல்கள் கூறுகின்றது. மேலும் தண்ணீர் எடுத்து முகத்தில் ஊற்றியதன் பெயரில், டேவிட்டிற்கு சிறைத் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
உணவுப் பொருளின் பெயரில் சகோதரர்களுக்கிடையே நடந்த வாக்குவாதம், இப்படி ஒரு பெரிய களேபரத்தில் முடிந்தது தொடர்பான செய்தி தற்போது அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.
மற்ற செய்திகள்