"45 வருசம் கழிச்சு மீட் பண்றேன்".. வாழ்க்கையின் முக்கியமான மனுஷி அவங்க.. கண் கலங்க வைக்கும் Flashback!!
முகப்பு > செய்திகள் > உலகம்45 வருடங்களுக்கு பிறகு தனது வாழ்வில் முக்கிய பங்கு வகித்த நபரை பார்க்க ஒருவர் எடுத்துக் கொண்ட முயற்சி தொடர்பான செய்தி, தற்போது பலரையும் மனம் உடைய வைத்துள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில், உலகத்தின் எந்த மூலையில் ஏதாவது வித்தியாசமான அல்லது வினோதமான விஷயங்கள் நடைபெற்றால் உடனடியாக அவை சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கும்.
இதில், நாம் நிறைய எதிர்மறையான விஷயங்களை பார்க்கும் அதே வேளையில், மனதை பாசிட்டிவாக, மிகவும் நிம்மதியுடன் அணுகக் கூடிய வீடியோக்கள் அல்லது செய்திகள் கூட அதிகம் பேசு பொருளாக மாறும்.
அப்படி ஒரு செய்தி தொடர்பான வீடியோ தான், தற்போது நெட்டிசன்கள் பலரது மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், அங்கிருந்து பொலிவியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும், இதற்கு பின்னால் ஒரு 45 ஆண்டுகால உருக்கமான பிளேஷ்பேக்கும் உள்ளது.
ஜான்சன் என்ற அந்த நபர் சிறுவனாக இருந்த போது அவரை கவனித்து வந்த அனா என்ற 'Nanny'ஐ மீண்டும் சந்திக்க வேண்டும் என அவர் முடிவு எடுத்துள்ளார். முன்னதாக, சிறு வயதில் ஜான்சனை சொந்த மகன் போலவே கருதி, அனாவும் பார்த்து வந்துள்ளார். இதனால், அவர்களுக்கு இடையே இருந்த பிணைப்பும் பலமாக இருந்துள்ளது.
இதனையடுத்து, சுமார் 45 ஆண்டுகள் கழித்து அனாவை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்றும் ஜான்சன் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் பல வித முயற்சிகளில் ஈடுபட்டு, கடைசியில் பொலிவியா நாட்டில் அனா இருப்பதை கண்டுபிடித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கடுத்து, ஸ்பெயின் நாட்டில் இருந்து சர்ப்ரைஸாக பொலிவியாவுக்கு கிளம்பி உள்ளார் ஜான்சன்.
தொடர்ந்து, அவர் பயணம் மேற்கொண்டது தொடர்பான வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அனாவை நேரில் கண்டதும் தான் யார் என்ற விவரத்தை ஜான்சன் அவரிடம் தெரிவிக்கிறார். தொடர்ந்து, ஜான்சனை அடையாளம் கண்டதும் அனா முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம் வெளிப்படுகிறது. மேலும், மனம் உருக ஜான்சனை கட்டியணைக்கவும் செய்கிறார் மூதாட்டி அனா.
தன்னை சிறு வயதில் சொந்த மகன் போல கவனித்த Nanny'ஐ பார்த்தே தீர வேண்டும் என முடிவு செய்த நபர், அதற்கான தேடலை தொடங்கி கடைசியில் அவரை சந்தித்துள்ளது தொடர்பான உருக்கமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், தற்போது பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.
After more than 45 years apart this man finds his former nanny named Ana. An incredible woman who took care of him as a child as if he were her own son. (🎥:juanitojonsson)
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) September 28, 2022
மற்ற செய்திகள்