'நம்பிக்கை இல்லனா கார்ல போய் பாருங்க'.. 'மீதி பேர் சடலம்லாம் வீட்ல இருக்கு'.. போலீஸ் ஸ்டேஷனை மிரளவைத்த 'கொலையாளி!'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கலிபோர்னியாவின் ரோஸ்வில் நகரில் தொழில்நுட்ப நிபுணராக பல ஆண்டுகள் பணிபுரிந்து வரும் அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் தனது குடும்பத்தினரையே கொன்று, சடலங்களுடன் சென்று போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளனர்.

'நம்பிக்கை இல்லனா கார்ல போய் பாருங்க'.. 'மீதி பேர் சடலம்லாம் வீட்ல இருக்கு'.. போலீஸ் ஸ்டேஷனை மிரளவைத்த 'கொலையாளி!'!

அண்மையில் ஹாங்காட் என்பவர் அவர், தனது வீட்டருகே உள்ள காவல் நிலையத்துக்கு காரில் சென்று, தனது குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தானே கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். மேலும் தான் கொலை செய்ததை நிரூபிக்க அவரது காரில் ஒரு சடலத்தை எடுத்து வந்துள்ளதாகவும், மீதமுள்ள சடலங்கள், தனது வீட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் கூறியதை கேட்டு, அவரது வீட்டிற்கு சென்று போலீசார் ஆய்வு நடத்தியபோது, இரண்டு சிறுவர்கள் உட்பட மேலும் 3 பேரின் சடலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஹாங்காட், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத்தகவலை தற்போது வெளியிட்டுள்ள காவல் நிலைய அதிகாரி ஜோசுவா சைமன், இறந்துபோனவர்களின் விவரங்கள் மற்றும் கொலைக்கான காரணத்தை கூற மறுத்துவிட்டார்.

ஆனால் ஹாங்காட் இந்த ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 78 ஆயிரத்து 603 அமெரிக்க டாலரை, அதாவது இந்திய மதிப்பில் 1 கோடியே 27 லட்சத்தை வரியாக (federal tax)செலுத்தியதாக கூறப்படுகிறது.

BIZARRE