"காஃபி'க்கு பால் இல்லன்னு கடைக்கு போனவரு.." திரும்பி வரப்போ கோடீஸ்வரனாவே மாறிட்டாரு.. வேற லெவலில் அடிச்ச 'அதிர்ஷ்டம்'
முகப்பு > செய்திகள் > உலகம்அதிர்ஷ்டம் என்பது பலருக்கு எதிர்பாராத நேரத்தில், நினைத்தே பார்க்க முடியாத சமயத்தில் கதவைத் தட்டும்.
அதிர்ஷ்டத்தை அடைய வேண்டும் என்றால், அதற்கான தகுதி எதுவும் வேண்டும் என்றில்லை. நேரமும், காலமும் சிறப்பாக இருந்தாலே போதும்.
அந்த வகையில், யுனைடெட் ஸ்டேட்ஸ் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, அடித்துள்ள அதிர்ஷ்டம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பால் வாங்க போனவரு..
தன்னுடைய வீட்டில், காஃபி போடுவதற்கு பால் இல்லாத காரணத்தினால், நபர் ஒருவர் அருகிலுள்ள ஸ்டோர் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கே பால் வாங்கிய அந்த நபர், வாடிக்கையாளர் சர்வீஸ் கவுண்டர் அருகே லாட்டரி டிக்கெட் இருப்பதை பார்த்துள்ளார். அதில், மறுநாள் தேதி குறிப்பிடப்பட்டு, அன்று குலுக்கல் உள்ளதாக குறிப்பிட்டு இருப்பதை கவனித்துள்ளார். இதனால், அதனை வாங்கவும் முடிவு செய்துள்ளார் அந்த நபர். இதனையடுத்து, பாலுடன் லாட்டரி டிக்கெட்டையும் வாங்கிச் சென்ற நபருக்கு, மறுநாள் குலுக்கலில் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
கோடீஸ்வரரா மாறிட்டாரு..
அவர் வாங்கிய லாட்டரிக்கு இந்திய மதிப்பில், சுமார் 15 கோடி ரூபாய் பரிசு கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதுகுறித்து பரிசு வென்ற நபர் பேசுகையல், "நான் ஒரு நிமிடம் பதறியே போனேன். அதே வேளையில் மிகவும் உற்சாகத்துடனும் உள்ளேன். இது மிகவும் பெரிய தொகை. காஃபிக்காக தேவைப்பட்ட பால், வீட்டில் தீர்ந்து போனது. பால் வேண்டும் என்பதால், அவசரமாக நான் கடைக்கு சென்ற போது டிக்கெட் வாங்கி வந்தேன்" என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியை, அந்த லாட்டரி டிக்கெட் நிறுவனமும் அவர்களின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. பால் வாங்க போனவர், லாட்டரி டிக்கெட் எடுத்து வந்த போது, அவருக்கு 15 கோடி ரூபாய் பரிசு கிடைத்து, கோடீஸ்வரராகவும் மாற்றியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
மற்ற செய்திகள்