'எதிர்பாராமல் நடந்த விபத்து'... 'சோகத்தோடு படுத்திருந்தவர் திடீரென எழும்பி ஹாலுக்கு ஓட்டம்'... ஒரே நாளில் அடித்தது பாரு யோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அதிர்ஷ்டம் மீது ஒரு சிலருக்கு நம்பிக்கை இல்லையென்றாலும், பலருக்கும் இன்றளவும் அதீத நம்பிக்கை உள்ளது.

'எதிர்பாராமல் நடந்த விபத்து'... 'சோகத்தோடு படுத்திருந்தவர் திடீரென எழும்பி ஹாலுக்கு ஓட்டம்'... ஒரே நாளில் அடித்தது பாரு யோகம்!

ஒருவரை ஒரே இரவில் கோடீஸ்வரராக அதிர்ஷ்டம் மாற்றிவிடும். அதனால்தான் உலகளவில் சூதாட்டம் மற்றும் லாட்டரி பிஸ்னஸ் கொடிகட்டிப் பறக்கிறது.

தமிழகத்தில் லாட்டரிக்கு தடை இருந்தாலும், அண்டை மாநிலமான கேரள உள்ளிட்ட பிற மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை புழக்கத்தில் இருக்கிறது. மேற்கத்திய மற்றும் வல்லரசு நாடுகளிலும் லாட்டரிக்கான மவுசு உச்சத்தில் உள்ளது.

அப்படி, லாட்டரி மீது அதீத நம்பிக்கை கொண்ட ஒருவர் தான், ஒரே இரவில் மில்லியனராக மாறியுள்ளார்.

வடக்கு கரோலினா பகுதியில் உள்ள லேலேண்ட் பகுதியில் வசித்து வரும் அத்தோணி டாவ், மெகா மில்லியன் லாட்டரி சீட்டுகளை வாங்கி வைத்துள்ளார்.

இவர் கடந்த செவ்வாய் கிழமை அன்று தனது புதுக்காரில் பணிக்கு கிளம்பிச் சென்றார். அப்போது சாலையைக் கடந்த 2 மான்கள் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.

இதனால், காரை பாதிவழியிலேயே திருப்பிக்கொண்டு வீட்டை அடைந்த அத்தோணி தாவ், அறைக்கு சென்று தூங்கி ஓய்வு எடுத்துள்ளார்.

பின்னர், படுக்கையில் இருந்து எழுந்தவுடன் மெகா மில்லியன் லாட்டரி பரிசு சீட்டை எடுத்து, அன்றைக்கு வெளியான லாட்டரி முடிவுகளுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளார்.

அதில் அவருக்கு 2 மில்லியன் டாலர் பரிசுத் தொகை விழுந்துள்ளது. இதனைப் பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கே அவர் சென்றுள்ளார்.

இது குறித்து பேசிய அத்தோணி தாவ், "செவ்வாய்க்கிழமை காலைப்பொழுது எனக்கானதாக அமையவில்லை. காலையில் எழுந்து வேலைக்கு எனது புதிய காரில் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது எதிர்பாராதவிதமாக 2 மான்கள் மீது மோத விபத்தில் சிக்கிக்கொண்டேன். சோகத்தில் வீடு திரும்பிய நான், எனது அறைக்கு சென்று ஓய்வெடுத்தேன்.

பின்னர், எழுந்தவுடன் மெகா மில்லியன் லாட்டரி சீட்டு பரிசு முடிவுகளை பார்த்தேன். எனக்கு ஒரே வியப்பு, மகிழ்ச்சி! ஏனென்றால் அன்றைய லாட்டரி சீட்டு முடிவுகளில் எனக்கு பரிசு விழுந்திருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை" என்றார்.

பின்னர், லாட்டரி சீட்டு தலைமையகம் அமைந்துள்ள ராலே பகுதிக்கு சென்று தனது பரிசுத் தொகையை பெற்றிருக்கிறார். இவருக்கு வரி பிடித்தத்துக்குப் பிறகு 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக கிடைத்துள்ளது. ( இந்திய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாய்)

பரிசுத்தொகையைக் கொண்டு தாய் தந்தைக்கு ஒரு வீடும், தனக்கு ஒரு காரும் வாங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். மீதிப் பணத்தை வங்கியில் சேமிக்க உள்ளதாகவும் அந்தோணி தாவ் கூறினார்.

 

மற்ற செய்திகள்