The Legend
Maha Others

"பொண்டாட்டி'ய Tour-க்கு கூப்ட்டு போக முடியலயே.." வேதனைப்பட்ட கணவர், கடைசியில் எடுத்த அதிரடி ஐடியா.. "இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா??"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பொதுவாக, திருமணம் ஆகும் புது ஜோடிகள், ஒன்றாக இணைந்து ஏராளமான இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என நினைப்பார்கள்.

"பொண்டாட்டி'ய Tour-க்கு கூப்ட்டு போக முடியலயே.." வேதனைப்பட்ட கணவர், கடைசியில் எடுத்த அதிரடி ஐடியா.. "இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா??"

Also Read | "நண்பரின் மனைவியுடன் ரகசிய உறவா??.." சர்ச்சையை உண்டு பண்ணிய செய்தி.. எலான் மஸ்க் சொன்னது என்ன?

அப்படி அவர்கள் நினைக்கும் இடத்திற்கு, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உடனடியாக செல்ல முடியவில்லை என்றாலும், அடுத்த சில ஆண்டுகளில் நிச்சயம் சென்று விட வேண்டும் என்றும் அவர்கள் நினைப்பார்கள்.

அப்படி ஒரு தம்பதி, நீண்ட நாளாக ஒரு இடத்திற்கு செல்ல ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடைசியில் அந்த ஆசை கைகூடியும் வந்த போது திடீரென நடந்த ட்விஸ்ட்டும், அதன் பின்னர் நடந்த சம்பவமும், பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.

Raymond மற்றும் Joanne Fortunado ஆகிய தம்பதி, நீண்ட நாட்களாக பிலிப்பைன்ஸ் நாட்டின் Palawan பகுதியிலுள்ள கோரோன் என்னும் இடத்திற்கு சுற்றுலா சென்று, ஒன்றாக நேரத்தை கழிக்க திட்டம் போட்டுள்ளனர். நீண்ட நாள் விருப்பம், சமீபத்தில் நிறைவேறவும் வழி அமைந்துள்ளது. அதன்படி, Raymond மற்றும் Joanne ஆகியோர், சுற்றுலா செல்லவும் தயாராகினர்.

man goes vacation with wife pillow netizens react

அப்படி ஒரு வேளையில் தான், மாடலான மனைவி Joanne-வுக்கு வேலை வரவே, கணவருடன் விடுமுறையை கழிக்க முடியாத சூழ்நிலையும் உருவானது. தான் எங்கு சென்றாலும், மனைவியுடன் செல்வேன் என வாக்குறுதி ஒன்றையும் Raymond அளித்துள்ளார். ஆனால், தற்போது மனைவியால் வர முடியவில்லை  என்பதால், தனது வாக்குறுதியை மெய்ப்பிக்க வேண்டி, வேற லெவல் திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளார் Raymond.

அதாவது, மனைவியின் முகத்துடன் கூடிய தலையணை ஒன்றை கோரோனுக்கு கணவர் Raymond எடுத்து சென்றுள்ளார். அப்படி சுற்றுலா சென்றதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், விமானம் தொடங்கி, தான்  உணவு உண்ணும் இடங்களிலும், கயாக் படகில் அவர் சென்ற போதும், மனைவியின் தலையணையுடன் நீரில் நேரத்தை செலவிட்டும் புகைப்படங்களை எடுத்துள்ளார்.

man goes vacation with wife pillow netizens react

அதே போல, மனைவியின் முகம் கொண்ட தலையணை மீது முகக் கவசம் போட்டும், செல்லும் கடைகளில் எல்லாம் அதனை வைத்தும் நிறைய புகைப்படங்களை Raymond எடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் Raymond வெளியிடவே, இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டின் சிறந்த கணவர் இது தான் என்றும், மனைவிக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி விட்டார் என்றும் பல விதமான கமெண்ட்டுகளை அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Also Read | லாட்டரியில்.. 1 லட்சம் டாலர் பரிசு.. "ஆனா, அதுக்கு முன்னாடி.." இன்ப அதிர்ச்சியில் உறைந்த பெண்

MAN, WIFE, VACATION, WIFE PILLOW

மற்ற செய்திகள்