40 வருசத்துக்கு முன்னாடி காணாம போன மனைவி.. ஒரே ஒரு தப்பால்.. இத்தன வருசம் கழிச்சு மாட்டிய கணவர்.. திடுக்கிட வைக்கும் பின்னணி
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த 1982 ஆம் ஆண்டு, Kempsey என்னும் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிலிருந்து காணாமல் போன சம்பவம் தொடர்பாக, சுமார் 37 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த துப்பும், இதற்கான காரணமும் தற்போது பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.
டேவிட் வெனாபிள்ஸ் என்ற நபர் ஒருவர், கடந்த 1982 ஆம் ஆண்டு மே மாதம், தனது மனைவி ப்ரெண்டாவை காணவில்லை என மனம் உடைந்து போய் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
முன்னதாக, ப்ரெண்டாவால் குழந்தை பெற முடியவில்லை என்றும், அதிகமான மன அழுத்தம் மற்றும் காலில் சில காயங்களுடன் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும், இதனால் அவர் ஏதாவது முடிவை எடுத்திருக்கலாம் என்றும் டேவிட் குறிப்பிட்டிருந்தார்.
சுமார் 37 ஆண்டுகளாக, ப்ரெண்டா குறித்து தகவல் எதுவும் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு, மிகப்பெரிய ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. Kempsey பகுதியில் இருந்த தனது வீடு மற்றும் பண்ணை நிலத்தை, 2014 ஆம் ஆண்டு தனது மருமகனுக்கு விற்றுள்ளார் டேவிட். அவர் வாங்கிய ஐந்து ஆண்டுகளுக்கு பின், கடந்த 2019 ஆம் ஆண்டு வீடு மற்றும் அதன் சுற்றுப் பகுதியை பராமரிக்க டேவிட்டின் மருமகன் முடிவு செய்துள்ளார்.
அப்படி அங்கிருந்த பாதாள செப்டிக் டேங்க் ஒன்றை சுத்தம் செய்த போது, உள்ளே சில மனித எலும்புகள் மற்றும் உடைகள் கிடைத்துள்ளது, அங்கிருந்தவர்களை திடுக்கிட செய்தது. இது தொடர்பாக, விசாரணை மேற்கொண்டதில் ஏராளமான அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கடந்த 1982 ஆம் ஆண்டு காணமால் போன ப்ரெண்டாவின் உடல் தான் என்பது தெரிய வந்தது.
அதே போல, டேவிட்டிற்கு பல பெண்களுடன் தகாத உறவுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான விஷயம், அவரது மனைவிக்கும் தெரிய வந்த நிலையில், அவரை கொலை செய்து விட்டு, மற்ற பெண்களுடன் உறவில் நீடிக்க வேண்டும் என்றும் டேவிட் விரும்பியுள்ளார். இதற்காக மனைவியைக் கொன்ற டேவிட், தனது பண்ணை நிலத்தில் அமைந்துள்ள பாதாள கழிவுநீர் தொட்டிக்குள் அவரது உடலையும் புதைத்துள்ளார்.
அது மட்டுமில்லாமல், மனைவி காணாமல் போனதாகவும் கூறி கண்ணீர் விட்டு நாடகமும் நடத்தி உள்ளார் டேவிட். அப்படி இருக்கையில், கடந்த 2014 ஆம் ஆண்டு தனது பண்ணை நிலத்தை மருமகனுக்கு விற்ற போது, நிச்சயம் பாதாள கழிவுநீர் தொட்டிக்குள் இருக்கும் மனைவி தொடர்பான தகவலை அவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள் என எளிதாகவும் டேவிட் விட்டு விட்டார். அப்படி அவர் விற்காமல் இருந்தால் கூட, டேவிட் சிக்குவது கடினமாகி இருக்கும்.
ஆனால், மருமகன் சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற சமயத்தில் தான், மனைவியின் உடல் கிடைத்து வசமாக சிக்கவும் செய்துள்ளார் டேவிட். மனைவியின் உடல் கிடைத்த போதும் தன் மனைவி அதிக மன அழுத்தம் மற்றும் நோய் ஏற்பட்டதன் காரணமாக, தற்கொலை செய்து கொள்ள, கழிவு நீர் தொட்டிக்குள் மூழ்கி தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்பதில் தான் டேவிட் உறுதியாக இருந்தார். அதே போல, டேவிட் மனைவியை காணவில்லை என புகாரளித்த போது, போலீசார் பாதாள கழிவுநீர் தொட்டியை சோதனை செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
திருமணத்திற்கு பிறகு டேவிட் மற்றும் ப்ரெண்டா உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்பதும், இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த ப்ரெண்டா, மனநல மருத்துவரிடம் கணவரின் குணம் குறித்து கூறி இருந்ததும் பின்னர் தெரிய வந்தது. பின்னர் குற்றங்களை டேவிட் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக, ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணையில், தற்போது 89 வயதாகும் டேவிட்டிற்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால், டேவிட் சிறையிலேயே இறக்க வேண்டி இருக்கும். 1982 ஆம் ஆண்டு, மனைவியை கொலை செய்தததற்கு சுமார் 40 ஆண்டுகள் கழித்து கணவருக்கு தண்டனை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தல்.. கரெக்ட்-ஆன Time ல ஆனந்த் மஹிந்திரா ஷேர் செஞ்ச மீம்.. வைரல் ட்வீட்..!
மற்ற செய்திகள்