நடுக்காட்டுக்குள்ள மறைக்கப்பட்ட புதையல்.. தாத்தா கொடுத்த சீக்ரட் Map.. 80 வருஷத்துக்கு அப்புறம் பேரனுக்கு அடிச்ச ஜாக்பாட்..!
முகப்பு > செய்திகள் > உலகம்தனது தாத்தா கொடுத்த மேப்பை பயன்படுத்தி 80 வருடங்களுக்குப் பிறகு தங்களது குடும்பத்திற்கு சொந்தமான புதையலை மீட்டெடுத்து இருக்கிறார் ஒருவர்.
Images are subject to © copyright to their respective owners.
போலந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜான் கிளாவெஸ்கி. இரண்டாம் உலகப் போரின் போது சிதறிப்போன பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்று ஜானுடையது. 1939 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கும் சோவியத் ரஷ்யாவிற்கும் இடையே போர் மூண்டது. அந்தக் காலகட்டத்தில் மேற்கு உக்ரைனில் லிலீவ் பகுதியில் ஜானின் தாத்தா வசித்து வந்திருக்கிறார். அப்போது தனது குடும்பத்தினரை காப்பாற்ற கிழக்கு போலந்துக்கு குடும்பத்துடன் தப்பி சென்று இருக்கிறார் அவர்.
Images are subject to © copyright to their respective owners.
அந்த சூழ்நிலையில் தங்களிடம் இருந்த தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வீட்டிற்குள் இருந்த பாதாள அறைக்குள் வைத்துவிட்டு உயிர் பிழைத்தால் வந்து எடுத்துக் கொள்ளலாம் என நினைத்து அங்கிருந்து சென்று இருக்கின்றனர் ஜானின் முன்னோர்கள். ஆனால் காலத்தின் பாதை வேறு வழியில் அவர்களை செலுத்தியது. பூர்வீக வீட்டிலிருந்து தப்பிய குடும்பத்தினர், பல நாடுகளுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டனர். எஞ்சி இருந்தவர்களும் போரினால் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
இறுதியில் ஜானுடைய தந்தையின் குடும்பம் மட்டுமே தப்பித்திருக்கிறது. ஜான் சிறுவனாக இருந்தபோது தனது தாத்தா புதையல் பற்றி கூறுவதை ஆர்வத்துடன் கேட்டிருக்கிறார். காலங்கள் உருண்டோட தாத்தாவின் புதையலை எப்படியாவது எடுத்து விட வேண்டும் என அவருக்குள் சபதம் எடுத்திருக்கிறார். இதையடுத்து தனது தாத்தாவிடம் புதையல் இருக்கும் இடத்தை ஒரு வரைபடம் மூலமாக தனக்கு சொல்லிக் கொடுக்குமாறு கேட்டு இருக்கிறார் ஜான். அதன்படி அவரது தாத்தா தன்னுடைய ஞாபகத்தில் இருந்ததை வைத்து ஒரு வரைபடத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
அதுமட்டுமல்லாமல் அந்த வரைபடத்தில் "நீ எப்படியாவது எனது சிலுவைகளையும் துப்பாக்கிகளையும் கண்டுபிடித்து விட வேண்டும்" என எழுதி இருக்கிறார் அந்த தாத்தா. இதனையடுத்து புதையலை தேட ஜான் புறப்பட்டுள்ளார். ஆனால் அடுத்தடுத்து அவருக்கு தோல்விகள் ஏற்பட்டு இருக்கின்றன. பல வருடங்கள் கழித்து அந்த பகுதிக்கு சென்றதால் பல இடங்கள் மேப்பில் இருந்தது போல இல்லை. இருப்பினும் முயற்சியை கைவிடாத ஜான் உள்ளூர் மக்களிடம் பேசி இது பற்றி விவரித்து இருக்கிறார்.
அப்போது 93 வயது முதியவர் ஒருவர் ஜானுக்கு உதவ முன்வந்திருக்கிறார். அதன்படி ஜான் சமீபத்தில் தன்னுடைய குடும்ப பொக்கிஷத்தை கண்டெடுத்திருக்கிறார். அதனுள் ஏராளமான தங்க மற்றும் வெள்ளிப் பொருட்கள் இருந்ததாகவும் அதன் மதிப்பை விட தனது தாத்தாவின் ஆசையை நிறைவேற்றியதே பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் ஜான்.
மற்ற செய்திகள்